2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வவுனியாவில் அம்மாச்சி உணவகம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவகம் என்பது வியாபாரமாக மட்டும் பெருமளவில் முன்னெடுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமான உணவுகளை வழங்கும் உணவகங்கள் என ஒரு சிலதை மட்டும் இலங்கையில் குறிப்பிட முடியும்.

அந்த வகையில் ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதுடன், வவுனியா மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் வசிக்கும் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த உணவகம் இலங்கை அரசாங்கத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் நிறுவப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் வௌ;வேறு தானியங்கள், பச்சை இலைகள், சேனைக்கிழங்கு, கிழங்கு, பருப்பு வகை மற்றும் மரக்கறிகளைக் கொண்டு பத்திய முறையிலமைந்த ஆரோக்கியமாக பாரம்பரிய முறையில் உணவுகள் உடனுக்குடன் தயாரிக்கப்படுகின்றன. காலை 7.00 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த உணவகம் திறந்திருக்கும்.

இந்த உணவகத்தினால் தற்போது கொழும்பு மற்றும் தென்பகுதியிலிருந்து வடபகுதி நோக்கி செல்வோருக்கு இடையே தரித்து இளைப்பாறி உணவருந்தக்கூடிய வசதிகள் வழங்கப்படுவதுடன், இந்த திட்டத்தினூடாக வவுனியா பிரதேசத்தின் விவசாய அடிப்படையிலான மகளிர் கழகங்களைச் சேர்ந்த 28 பெண்கள் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளதுடன், சுமார் 300 விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X