Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச பணப்பரிமாற்ற, செலுத்துகை துறையில் உலகபுகழ் பெற்ற நிறுவனமான வெஸ்டன் யூனியன் நிறுவனம் (Western Union), இலங்கையின் முன்னணி வெஸ்டன் யூனியன் முகவரான எம்.எம்.பி.எல் மணிமாஸ்டர் (MMBL Money Master) நிறுவனம் நாடளாவிய வெஸ்டன் யூனியன் வாடிக்கையாளர்களுக்கான பணத்தை அவர்களது விட்டுக்கே கொண்டுசென்று வழங்கிடமோர் சேவையை ஆரம்பித்துள்ளது.
COVID - 19 சவாலுக்கிடையே அனைத்து இலங்கையரினதும் பாதுகாப்புக்கு அரசாங்கத்தால் நாடளாவிய ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதோர் சந்தர்ப்பத்தில் உலகளாவிய ரீதியில் உங்கள் அன்பானவர்கள் அனுப்பிடும் பணத்தை உங்கள் வீட்டுக்கே பெற்றுக்கொள்ளக்கூடியமை வெஸ்டன் யூனியன் வாடிக்கையாளர்களுக்கு பெரிதோர்பக்க பலமாய் அமைந்திடும். இச் சேவையானது, ஊரடங்குச்சட்டத்தின் போதும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை செயற்படுத்தப்படும்.
வெஸ்டன் யூனியன் உலகளாவிய வலையமைப்பின் தலைவர் ஜின் குளோட் ஃபாரா, இப்புதிய சேவை பற்றி கருத்து தெரிவிக்கையில்,
“வெஸ்டன் யூனியன் சேவையானது, தேவையான இடத்துக்குத் தேவையான நேரத்தில் ஒப்பற்றதோர் சேவையை வழங்கிட அர்ப்பணிப்புடன் பணியாற்றுமோர் நிறுவனமாகும். எம்.எம்.பி.எல் மணிமாஸ்டர் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு தமது அன்பிற்குரியவர்கள் அனுப்பிடும் பணத்தினை இலகுவாக பெறுவதற்கானதோர் முறையினை அறிமுகப்படுத்தக்கூடியதாக அமைந்தமை மகிழ்ச்சிக்குரியதே. விசேடமாக இக்காலத்தில் இத்திட்டமானது, எமது வாடிக்கையாளர்களுக்கு பெரிதோர் வசதியாக அமைந்திடும் என்பதே எமது நம்பிக்கை.
“இப்புதியசேவையினால் மக்களின் பணத்திற்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு, வங்கி கணக்கற்றோருக்கும் இதனூடாக பெரியதோர் சேவை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
எம்.எம்.பி.எல் மணிமாஸ்டர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தினேஸ் மெண்டிஸ் இது பற்றி கருத்து தெரிவிக்கையில்,
“வெஸ்டன் யூனியன் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இப் புதிய சேவையை வழங்க முடிந்தமை எமக்கு மகிழ்ச்சியே. COVID - 19 காரணமாக நடைமுறையிலுள்ள ஊரடங்குச்சட்டம், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையினால், வெளிநாட்டிலிருந்து அனுப்பிடும் பணத்தினை பெரியதோர் நிலைகாணப்படுகின்றது. இவ்வாறானதோர் நிலையினால்
“அத்தியாவசிய பொருள்களை கூட கொள்வனவு செய்ய முடியாததோர் பிரச்சினைக்கு பலர்முகம் கொடுத்துள்ளனர். ஆகவே அவர்களுக்கோர் பக்கபலமாய் இருந்திட நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றோம்” என்று கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கான அறிவுறுத்தல்:
பணத்தை அனுப்பியுள்ளதாகப் பெறுனருக்கு தெரிவித்தபின், ஆஆடீடு ஆழநெல ஆயளவநச அழைப்பு மத்திய நிலையத்தின் 011-5529999 அல்லது 011-5529997 எனும் இலக்கங்கங்களுக்கு அழைத்து அருகே உள்ள MMBL Money Master கிளையை அறிந்திடுங்கள்.
பின் அருகே உள்ள அக்கிளையினை தொடர்கொண்டு, தொலைப்பேசி,மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஹப் ஊடாக அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் அப் பிரதிநிதிக்கு வழங்கிடுங்கள். அத்தியாவசிய தகவல்களில் MTCN, பெறுனரின் பெயர், பணம் அனுப்பியவரின் பெயர் மற்றும் நாடு, அனுப்பியுள்ள தொகை போன்ற தகவல்கள் உள்ளடங்கும்.
பிரதிநிதிபணம் பெறுனருக்கான 'பணம் பெற்றிட' (TRM) படிவத்தைப் பூர்த்தி செய்திடுவார்; தகவல் பெற்று உறுதிசெய்யப்பட்டதன் பின்னர், அப்பிரதிநிதி பணத்துடன் உங்கள் வீட்டுக்கே வந்து பணத்தைக் கையளித்திடுவார்.
பணத்தைக் கையளித்திட முன்பு, பிரதிநிதியினால் பணம் பெறுனரின் அடையாள அட்டையினை பெற்று உறுதிப்படுத்தப்படுவதோடு, TRM படிவம், இறுதி ரசீதில் கையொப்பம் பெற்று பணம், ரசீது பணம் பெறுனருக்கு வழங்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago