2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வைபர் உடன் இணைந்து வெல்லுங்கள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 5 மில்லியனுக்குஇலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 5 மில்லியனுக்கு அதிகமான பாவனையாளர்களின் திறமைகளை அடையாளம் காணும் நோக்கிலும், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் மத்தியில் படைப்பாற்றல் மிக்க ஸ்டிக்கர்களை வடிவமைத்து வெல்வதற்கான (Viber Design and Win) போட்டியை வைபர் நடாத்தவுள்ளது.   

வைபர் மூலமாக தெரிவு செய்யப்படும் 3 இறுதி போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பிள் iPad வழங்கப்படவுள்ளதுடன், இலங்கையில் எதிர்கால வைபர் ஸ்டிக்கர்களை வடிவமைப்பதற்கான உத்தியோகபூர்வ வடிவமைப்பாளர்களாக வரக்கூடிய வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது. மேலும் மிகச்சிறந்த 10 இறுதி போட்டியாளர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழும், வைபரின் சமூக ஊடகத்தளங்கள் முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.   

வைபர் மூலமாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட உள்நாட்டவர்களின் இரசனைக்கேற்ப வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தப்போட்டி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 96 மில்லியன் வைபர் ஸ்டிக்கர்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  ‘இலங்கை மக்கள் மிகவும் புத்திசாலியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் உள்ளனர் என நாம் நம்புகிறோம். Viber Design and Win என்பது இலங்கையில் மாணவர்கள், ஓவியர்கள் மற்றும் கிரியேட்டிவ் சமூகத்தினரை அழைக்கக்கூடிய தேசியளவிலான ஸ்டிக்கர் வடிவமைப்பு போட்டியாக உள்ளது. வைபர் தொடர்பாடலின் போது அன்பு, தோழமை மற்றும் உள்நாட்டு இரசணைக்கேற்ப ஸ்டிக்கர்களை வெளிப்படுத்துமாறு அவர்களை ஊக்கப்படுத்தவுள்ளோம்’ என வைபர் தெற்காசியா நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர் அனுபவ் நாயர் தெரிவித்தார்.   

18 வயதுக்கு மேற்பட்ட எவரும் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும். பங்குபற்றுநரின் பெயர், அலைபேசி இலக்கம் மற்றும் ஸ்டிக்கர் பற்றிய சிறிய விளக்கம் போன்றவற்றுடன் பங்குபற்றுநரின் வரிப்படம் அல்லது வடிவமைப்பினை, புகைப்படமாகவோ அல்லது jpeg ஆகவோ அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணமாகவோ சமர்ப்பிக்கப்படல் வேண்டும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X