Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 18 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, தனது 100 ஆவது கிளையை ஹங்வெல்ல நகரில் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. 132/3, கொழும்பு வீதி, ஹங்வெல்ல எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தப் புதிய கிளையைப் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ அங்குரார்ப்பணம் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் தலைவர், ஹேமசிரி பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் வங்கிசாராத முன்னணி நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனமாக 14 ஆண்டுகளாக திகழ, நிறுவனத்தின் நட்புறவான சேவை காரணமாக அமைந்துள்ளது. அத்துடன் சமூகத்தின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பங்களிப்பை வழங்கி வருகின்றமையால் தன் வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ள ஒரு நிறுவனமாக பிஎல்சி காணப்படுகிறது. அனைத்து இலங்கையர்களுக்கும் ஒப்பற்ற நிதிச்சேவைகளை வழங்கும் வகையில், நாட்டின் சகல பாகங்களுக்கும் எமது சேவைகளை விரிவுபடுத்தி வழங்குவது என்பது எமது நோக்காகும். நாட்டின் சகல பிரதான நகரங்களிலும், பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் கிளைக் காணப்படுகிறது.
20 வருட காலப்பகுதியினுள் இதை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றி வருகிறது”என்றார். தலைவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இன்று நாம் எமது நூறாவது கிளையை ஹங்வெல்ல நகரில் அங்குரார்ப்பணம் செய்துள்ளோம். இலங்கையர்களுக்கு தற்போது அதிகளவு பெறுமதி சேர்க்கப்பட்ட, சௌகரியமான மற்றும் சிக்கல் இல்லாத குத்தகை மற்றும் நிதிச்சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025