2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

ஹேமாஸ் தலவத்துகொடவில் புதிய அதிநவீன மருத்துவமனை மக்களுக்காக அங்குரார்ப்பணம்

Editorial   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் ஹேமாஸ் தலவத்துகொடவில் புதிய அதிநவீன மருத்துவமனையைத் மக்களுக்காக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படுகின்றது.

ஹேமாஸ் இன்று தலவத்துகொடவில் தனது அதிநவீன மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படுவதாக அறிவித்திருக்கின்றதுஇ இது குழுமத்தின் மிக நீண்டகால இலட்சிய முதலீடுகளில் ஒன்றாகும். 10 பில்லியன் ரூபாய் மூலதனச் செலவினத்துடன் கிட்டத்தட்ட 900 சுகாதார நிபுணர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ள இப்புதிய வசதிஇ இலங்கையில் சுகாதாரத் தரங்களை மேம்படுத்துவதற்கான ஹேமாஸின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. 

இத்தகைய புதியதோர் தடம்பதிக்கும் முயற்சி குழுமத்தின் பரந்த முன்னேற்ற மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்இ ஏனெனில் இது தொடர்ந்து தனது தடத்தை விரிவூபடுத்தி சுகாதாரத் துறையில் தனது நிலையை வலுப்படுத்துகின்றது.

“சுகாதாரப் பராமரிப்பின் எதிர்காலத்தை மறுவரையறை செய்தல்" எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில்இ கௌரவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸஇ மூத்த பிரமுகர்கள் ஆலோசகர்கள் இயக்குநர்கள் குழு மற்றும் ஹேமாஸ் குழும தலைமைத்துவக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இவ்விரிவாக்கம் ஹேமாஸ் கெப்பிட்டல் மருத்துவமனையை ஒரு முழுமையான மூன்றாம் நிலை பராமரிப்பு வசதியாக மாற்றுவதுடன்இ அதன் திறனை 150 படுக்கைகளாக இரட்டிப்பாக்கும் மற்றும் மேம்பட்ட தீவிர சிகிச்சை பிரிவூகள்இ அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சிறப்பு மையங்களை அறிமுகப்படுத்துகின்றது. மேம்பட்ட இருதய சிகிச்சையில் வலுவான கவனம் செலுத்துவதுடன் இது ஹேமாஸின் சமீபத்திய இதய குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வூ கூடம் மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியோலஜி திறன்களை விரிவூபடுத்துவதோடுஇ இதய சிகிச்சையின் நம்பகமான வழங்குநராக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றது.

நாட்டின் மிகப்பெரிய தனியார் சுகாதார முன்னேற்றங்களில் ஒன்றாகஇ சுகாதார உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கும்இ இலங்கையின் மருத்துவ தரங்களை பிராந்திய அளவூகோல்களுக்கு உயர்த்துவதற்கும்இ உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவையை நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும் ஹேமாஸின் நீண்டகால உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கின்றது.

இலங்கையில் சுகாதாரத் தரங்களை மேம்படுத்தல்

விரிவாக்கப்பட்ட மருத்துவமனை நாட்டின் சுகாதாரத் துறையில் பல முதன்மையான விடயங்களை அறிமுகப்படுத்துகின்றது.

- துல்லியமான இதய இடையீடுகளுக்கான யூஐ- உதவியூடன் கூடிய இருதயவியல் மற்றும் மேம்பட்ட இருதய அறுவை சிகிச்சை.

- சிறுநீரகவியல் மற்றும் எலும்பியல் துறையில் ரொபோடிக் அறுவை சிகிச்சைஇ குறைந்தபட்ச ஆக்கிரமிப்புஇ விரைவான மீட்பு மற்றும் மேம்பட்ட நோயாளி பாதுகாப்பை வழங்குகின்றது.

- ஸ்கொலியோசிஸ் திருத்தம் மற்றும் எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட விரிவான முதுகெலும்பு பராமரிப்பு.
- சிக்கலான தசைக்கூட்டு நிலைமைகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் தேவைகள் இரண்டையூம் ஆதரிக்கும் ஒரு பிரத்யேக எலும்பியல் காயம் மற்றும் விளையாட்டு மருத்துவ பிரிவு.

- குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு மற்றும் ரொபோ நுட்பங்களை உள்ளடக்கிய மேம்பட்ட நெப்ரொலஜி மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை.

சிகிச்சைக்கு அப்பால் - புத்தாக்கத்தின் இருப்பிடம்

ஹேமாஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் வைத்தியர். லக்கித் பீரிஸ் கூறுகையில், “ஒரு மருத்துவமனையை விட கற்றல் மற்றும் புத்தாக்கத்தின் மையமாக இவ்விரிவாக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதி இலங்கையின் முதல் ரொபோடிக் அறுவை சிகிச்சை பயிற்சி மையத்தை வழங்குகின்றது இது அடுத்த தலைமுறை வைத்தியர்களை மேம்பட்ட அறுவை சிகிச்சை திறன்களுடன் சித்தப்படுத்தும். பரிசோதனை, டிஜிட்டல் சுகாதார ஒருங்கிணைப்பு மற்றும் அறிவூ கூட்டாண்மைகளையூம் ஆதரிப்பதுடன்இ இதன் மூலம் மருத்துவமனைக்கு அப்பால் நன்மைகள் நீட்டிக்கப்படுவதையூம் உறுதி செய்கின்றது.”

நோயாளர்கள் மற்றும் தேசத்திற்கு சேவை செய்தல்

அதன் விரிவாக்கப்பட்ட திறன் மற்றும் முன்னோடி சேவைகளுடன், ஹேமாஸ் கெப்பிட்டல் மருத்துவமனைஇ இலங்கையர்கள் சிறப்பு பராமரிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவையைக் முற்றிலுமாக குறைக்கின்றதுஇ பொது சுகாதார அமைப்பின் சுமையைக் குறைக்கும், மேலும் சர்வதேச தரத்தில் மருத்துவப் பயிற்சி செய்வதற்கான தளத்தை மருத்துவர்களுக்கு வழங்கும்.

ஹேமாஸ் குழுமத்தின் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் தலைவர் திரு. முர்தாஸா யூ+சுஃப் அலி மேலும் தெரிவித்ததாவது:
"இத்திட்டம் இலங்கைக்கான ஹேமாஸின் அளப்பரிய அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது - புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்இ சமூகங்கள் முழுவதும் சுகாதார அணுகலை மேம்படுத்துதல் மற்றும் நாட்டை ஒரு அபிவிருத்தி அடைந்துவரும் பிராந்திய சுகாதார மையமாக நிலைநிறுத்துதல் ஆகியவையூம் இதனுள் உள்ளடங்கும்."

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆஷிஷ் சந்திரா கூறியதாவது:

"ஹேமாஸ் இலங்கையின் மிகப்பெரிய உடலநலப் பராமரிப்பு குழுவாக உள்ளதுஇ ஒளடதங்கள், அறுவை சிகிச்சை மற்றும் நோயறிதல் விநியோகம் மற்றும் உற்பத்திஇ அத்துடன் முதன்மைஇ மூன்றாம் நிலை மற்றும் வீட்டு பராமரிப்பு ஆகியவற்றில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு இலங்கையரின் வாழ்க்கையையூம் மேம்படுத்தும் எங்கள் நோக்கத்தால் வழிநடத்தப்பட்டு, அணுகக்கூடிய மற்றும் மலிவூ விலையில் உலகத் தரம் வாய்ந்த உடல்நலப் பராமரிப்பை வழங்க நாம் உறுதிபூண்டுள்ளோம். நோயாளி அனுபவத்தையூம் விளைவூகளையூம் மாற்றும் சமீபத்திய டிஜிட்டல் கண்டுபிடிப்புகளைக் கொண்ட இந்த அதிநவீன வசதிஇ உயர்தர பராமரிப்புக்கான அணுகலை விரிவூபடுத்துவதற்கான எமது தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றது"


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .