Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனமானது மைனர் ஹோட்டல் குறூப் உடன் பங்காளியாக ஒன்றிணைந்து, இலங்கையில் முதலாவது 'அனந்தாரா' (Anantara) தங்குவிடுதியான 'அனந்தாரா பீஸ் ஹேவன் தங்காலை ரிசோர்ட்' இனை திறந்து வைப்பது தொடர்பாக அறிவிப்பதையிட்டு பெருமிதம் அடைகின்றது.
இலங்கையின் தென் பிராந்திய கரையோரத்தில் கடற்கரையை முன்னோக்கியதாக தனிச்சிறப்புமிக்க விதத்தில் அமைக்கப்பட்டுள்ள 'அனந்தாரா பீஸ் ஹேவன் தங்காலை ரிசோர்ட்' ஆனது, இன்று 2015 டிசம்பர் 1ஆம் திகதி தொடக்கம் இங்குள்ள 'இரகசிய கடற்கரை சொர்க்கத்தின்' பிரத்தியேக தனித்தன்மையை அனுபவித்துப் பார்க்குமாறு தனது முதல் தொகுதி விருந்தினர்களுக்கு அழைப்பு விடுகின்றது,
கண்ணைக்கவரும் தங்காலை குடாவிற்கு மேலாக பார்க்கும் போது தென்படும் 21 ஏக்கர் தென்னந் தோட்டத்தில் இந்த தங்குவிடுதி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 120 விருந்தினர் அறைகள், தனித்து செயற்படக்கூடிய பிரத்தியேக நீர்த்தடாகத்துடனான 32 விடுதித் தொகுதிகள் (pool villas), ஆடம்பரமான ஒரு 'அனந்தாரா' ஆரோக்கிய மையம் (spa), இரண்டு மட்டங்களைக் கொண்ட விசாலமான நீச்சல் தடாகம், அனைத்து வசதிகளையும் கொண்ட இதயத்துடிப்பை செம்மைப்படுத்தும் உடற்பயிற்சிக் கூடம் (cardio-gym), சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர்களுக்கான கிளப் போன்றனவும் இங்கு காணப்படுகின்றன. சௌகரியமான பயண வசதியினால் இத் தங்குவிடுதியின் வசீகரத்தன்மை மேலும் மேம்படுத்தப்படுகின்றது. அதன்படி 'சின்னமன் எயார்' 40 நிமிட விமான சேவையை வழங்குகின்றது. அல்லது தங்குவிடுதியின் சொகுசு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி, கொழும்பில் இருந்து சுமார் மூன்று மணிநேரத்தில் தங்குவிடுதியை வந்தடைய முடியும்.
பல்வகைப்பட்ட உணவகங்கள், மற்றும் ஓய்விடங்கள் என்பன சிறப்பான சமையற்கலைசார் சூழலை தோற்றுவிக்கின்றன. இவை அனைத்திலிருந்தும் கடலை கண்டுகளிக்கக் கூடியதாக உள்ளது. 'ஜேர்னிஸ்' (Journey’s) என்ற, நாள் முழுக்க உணவுகளை வழங்கும் உணவகமானது உலகத் தரமான மற்றும் இலங்கை, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியத்திற்கே உரித்தான விஷேட உணவுகளை வழங்கும். 'வெரள' கடற்கரை உணவகத்தில் பகலுணவு மற்றும் இரவு உணவுக்;காக கிடைக்கும் இலங்கையரினால் மேம்படுத்தப்பட்ட 'தெப்பன்யாகி' வகை உணவானது சுவை அரும்புகளை தீப்பிடிக்கச் செய்யும். இந்த தங்குவிடுதியின் மிக முக்கியமான உணவகமான 'இல் மாரே' உணவகத்தில் இத்தாலிய கரையோர சிறப்பம்சங்களை கொண்ட மற்றும் மத்தியதரைக்கடல் பிராந்தியத்தின் கூட்டாக விருந்துண்ணும் சிறப்பம்சத்தை வெளிப்படுத்தும் உணவுகளை சுவைத்து மகிழலாம். டபாஸ் மற்றும் வைன் சுவைக்கும் வகையிலான உணவுப் பட்டியல் 'எல் வினோ' உணவகத்தின் உண்மையான பேசுபொருளாக இருக்கும். தடாக ஓரத்திலுள்ள மதுக்கூடம் புத்தூக்கமளிக்கும் குடிபானங்கள், நொறுக்குத்தீனிகள் மற்றும் சன்டவுன் கொக்டைல் மதுபானம் என்பவற்றை வழங்குகின்ற அதேவேளை இரம்மியமான அந்திவேளைக்காக, முன்புற ஓய்வுகூடம் இலங்கை ருசியுடனான தேனீரை வழங்குகின்றது.
ஆயுர்வேதத்தை ஆதாரமூலமாக கொண்டுள்ள 'அனந்தாரா ஸ்பா' பிரிவு முழுமையான நலன் பேணலுக்கு ஊக்கமளிக்கின்றது. இப் பழமைவாய்ந்த குணப்படுத்தல் செயன்முறையானது உள்ளம், உடல் மற்றும் ஆத்மா ஆகிவற்றுக்கு இடையிலான இடைத்தொடர்பை பலப்படுத்துகின்றது. இங்குள்ள சிறப்பம்சங்களுள் - இரட்டை சிகிச்சையளித்தல் பிரிவுகள் நான்கு, தனிச் சிகிச்சை பிரிவுகள் நான்கு, ஒரு அழகு சலூன் நிலையம், முக அலங்கார அறை, நிபுணத்துவம் பெற்ற ஆயுர்வேத மற்றும் தெறிவினையியல் (reflexology) அறைகள், அத்துடன் இரண்டு சாந்தப்படுத்தல் பிரிவுகள் போன்றனவும் உள்ளடங்குகின்றன.
தென்னிலங்கையிலுள்ள மனங்கவரும் இடங்களை சென்று பார்வையிடக் கூடிய ஒரு கேந்திர மையமாக 'அனந்தாரா' தங்குவிடுதி காணப்படுகின்றது. இவற்றுள் இலங்கையின் மிகச் சிறந்த சில வன வளங்களான யால, பூந்தல மற்றும் உடவளவ தேசிய பூங்கா மற்றும் ரெக்காவ ஆமைகள் சரணாலயம் போன்றவற்றை கண்டு கழிக்கலாம்.
சீ.என்.என். தொலைக்காட்சி ஒளிபரப்பும் '2015 இல் 11 ஹோட்டல்கள் திறக்கப்படுகின்றன. அதற்குள் நுழையும் வரை எம்மால் காத்திருக்க முடியவில்லை' என்று அர்த்தப்படும் பட்டியலில் 'அனந்தாரா பீஸ் ஹேவன் தங்காலை ரிசோர்ட்' தங்குவிடுதியையும் சேர்த்துள்ளது. இதனால் இத் தங்குவிடுதி தொடர்பாக ஏற்கனவே உலகெங்கும் மிகவும் ஆர்வம் ஏற்பட்டிருக்கின்றது. சீ.என்.என். தொலைக்காட்சியின் Quest’s Passport to 2015 (2015 இற்கான தேடலின் கடவுச்சீட்டு) எனும் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக ஒளிபரப்பாகின்றது. இந் நிகழ்ச்சியானது – குறித்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் கப்பல்கள், செல்லுமிடங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான ஒரு வழிகாட்டியாக செயற்படுகின்றது.
'அனந்தாரா பீஸ் ஹேவன் தங்காலை ரிசோர்ட்' ஆனது ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மைனர் ஹோட்டல் குறூப் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும். இரண்டாவது 'அனந்தாரா' வர்த்தக குறியீட்டிலான சொத்துடமையான – 'அனந்தாரா களுத்துறை ரிசோர்ட்' தங்குவிடுதியை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறந்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஓய்வுகால வசதியளிப்பு பிரிவான செரண்டிப் லெஸர் மெனேஜ்மன்ற் லிமிட்டெட் ஆனது - ஹோட்டல் சிகிரியா மற்றும் கிளப் ஹோட்டல் டொல்பின், அத்துடன் சர்வதேச அளவில் வர்த்தக குறியீடு இடப்பட்ட ஹோட்டல்களான அவனி பெந்தோட்டை ரிசோர்ட் அன்ட் ஸ்பா மற்றும் அவனி களுத்துறை ரிசோர்ட் போன்றவற்றை முகாமைத்துவம் செய்து வருகின்றது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago