Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 25 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
Ocean Lanka நிறுவனம், ஆடைத் தொழிற்றுறையில் 20 ஆண்டுகள் சேவை நிறைவைக் கொண்டாடியிருந்தது. கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் இடம்பெற்ற இந்தக் கொண்டாட்டத்தில், 20 ஆண்டுகள் சேவையைப் பூர்த்திசெய்த பல ஊழியர்களும் பாராட்டப்பட்டனர்.
Ocean Lanka நிறுவனம், கடந்த இரு தசாப்த காலத்தில் அடையப்பெற்றுள்ள வளர்ச்சி தொடர்பில் அந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி ஒஸ்டின் ஆவ் கருத்து தெரிவிக்கையில், “20 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 150 ஊழியர்களுடன் தொழிற்பட ஆரம்பித்த நாம், ஆரம்பத்தில் மாதம் ஒன்றில் 150,000 கிலோ துணி வகைகளை உற்பத்தி செய்திருந்தோம். இன்று 1,900 ஊழியர்களைக் கொண்ட ஒரு பெரும்விருட்சமாக நாம் வளர்ச்சிகண்டுள்ளதுடன், தற்போது மாதம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் கிலோவுக்கும் அதிகமான அளவு துணி வகைகளை உற்பத்தி செய்யும் அளவுக்கு எமது உற்பத்தி ஆற்றலை விஸ்தரித்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்துக்கு 25 பில்லியன் ரூபாயை (172 மில்லியன் அமெரிக்க டொலர்) பங்களித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளில், தொழிற்கூடம், இயந்திரங்கள் மற்றும் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்காக, 10 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை நாம் முதலீடு செய்துள்ளோம். Victoria’s Secret, Marks & Spencer, Adidas, Nike மற்றும் Gap உட்பட உலகிலுள்ள மிகப் பாரிய நவநாகரிக வர்த்தகநாமங்கள் சிலவற்றுக்கு நாம் தற்போது எமது சேவைகளை வழங்கிவருகின்றோம். Ocean Lanka நிறுவனத்தின் நீண்ட வெற்றிப் பயணம், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் கடந்த இரு தசாப்தங்களில் அதன் ஊழியர்கள் அடையப்பெற்ற நற்பயன்கள் தொடர்பில் நாம் உண்மையில் புளகாங்கிதம் அடைந்துள்ளோம்,’”என்று குறிப்பிட்டார்.
Ocean Lanka நிறுவனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வு, கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் இடம்பெற்றதுடன், அந்நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டனர். நத்தார் கொண்டாட்டங்களுடன் ஒன்றியதாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் உன்னதமான உணவுகள், பானவகைகள் மற்றும் மனதுக்கு இனிமையான இசை நாட்டியங்களுடனும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள Ocean Lanka நிறுவனம், ஐரோப்பிய நவநாகரிக வர்த்தகநாமங்களின் கேள்விகளை ஈடுசெய்யும் வகையில், தனது துணி வகை உற்பத்தியை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதுடன், இலங்கை தற்போது ஜீஎஸ்பி பிளஸ் (GSP+) சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில், அதன் மூலமான பயன்களை அறுவடை செய்யவுள்ளது. மீள்பொறிமுறை செய்யப்பட்ட நடைமுறை மற்றும் கழிவு முகாமைத்துவ நடைமுறைகளைச் சீரமைத்தல் ஆகியவற்றினூடாக அதியுச்ச தரத்தைத் தொடர்ந்தும் பேணும் அதேசமயம், செலவுகளைக் குறைப்பதற்கும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
8 minute ago
14 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
43 minute ago
52 minute ago