2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

25வருட நிறைவை கொண்டாடும் சொஃப்ட்லொஜிக்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹால்டிங்ஸ் நிறுவனம் 2016 ஜுலையில் அதன் 25 ஆவது வருட செயற்பாடுகளை நிறைவு செய்கின்ற போது நாட்டின் மிகவும் சக்தி மிக்க ஒரு வர்த்தக சாம்ராஜ்ஜியமாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது.

அதன் இணையத்தளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தற்போது ரூ. 57 பில்லியன் பெறுமதியான இந்தக் குழுமம், 12 ஊழியர்களுடன் 1991 ஜுலையில் ஒரு மென்பொருள் அபிவிருத்தி நிறுவனமாக ஒரு மில்லியன் ரூபாய் மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

துணிச்சலான தூரநோக்கு, வாய்ப்புக்களைப் பயன்படுத்த காத்திருக்கின்றமை, மதிப்பீடு செய்யப்பட்ட இடர்களை சமாளித்தல், என்பனவற்றின் மூலம் சொஃப்ட்லொஜிக் குடும்பம் உள்ளூர் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சி கண்டு வரும் ஆறு பிரிவுகளில் தனது நிலையை ஸ்திரமாகப் பதித்துள்ளது. சுகாதார பராமரிப்பு பிரிவிலும் சில்லறை வர்த்தகத்திலும் அது அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், வாகனங்கள் மற்றும் உல்லாசத் துறை என்பனவற்றிலும் அது தனக்கென தனியானதோர் இடத்தை தக்கவைத்துள்ளது.

கடந்த இரண்டரை தசாப்த கால வளர்ச்சியை திரும்பிப் பார்க்கின்ற போது சொஃப்ட்லொஜிக் ஸ்தாபகரும் தலைவருமான அஷோக் பதிரகே துரித வளர்ச்சிப் போக்கும் ஏனைய வர்த்தகங்களின் ஆக்ரோஷமான கையேற்புக்களுமே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். ஆசிரி வைத்தியசாலை குடும்பத்தை அது கையேற்றமை ஒடெல் நிறுவனத்தை கையேற்றமை என்பன இதில் குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் விற்பனைகள் 46 வீத வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ. 39 பில்லியனில் இருந்து ரூ. 57 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. எமது திட்டமிடல் படி எல்லாமே நடந்தால் அடுத்த 5 ஆம் ஆண்டில் எமது நிறுவனத்தின் அளவு இரு மடங்காக அதிகரிக்கும் என்று அஷோக் பதிரகே மேலும் தெரிவித்துள்ளார்.

'எமது வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக் கூடிய உறுதியான தளத்தில் நாம் இப்போது இருக்கின்றோம். கடந்த 25 வருட காலத்தை விட இது மிகவும் இலகுவானதாக இருக்கும். காரணம் நாம் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கின்றோம். எம்முடையதும் எமது மக்களினதும் தூர நோக்கு காரணமாக நாம் இந்த இலக்கை அடைந்துள்ளோம். மிகக் கடினமான பணிகளை நாம் செய்து முடித்துள்ளோம். அது வெறும் கடின உழைப்பு மட்டும் அல்ல. சரியான தகுதியான நபர்கள் அதற்குரிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளமை தான் சொஃப்ட்லொஜிக்கின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

சில நேரங்களில் துணிச்சலான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அது வர்த்தக இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நபர்கள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் இருந்து தான் உருவாகின்றது. இங்கிருந்து தான் அடுத்த கட்டத்துக்கும் நாம் செல்ல முடியும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X