Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துக்கான மொபிடெல் நிறுவனத்தின் “Cash Bonanza” வெற்றியாளராக களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த விஜித் ரொட்ரிகோ பெற்றுகொண்டார். அத்துடன் 2016ஆம் ஆண்டில் மேலும் 5 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொபிடெல் நிறுவனம் 2016ஆம் ஆண்டு முழுவதும் 3500 இலட்சம் ரூபாய் பெறுமதியானப் பணப்பரிசினை தமது வாடிக்கையாளர்களிடையே பகிர்ந்தளிக்கவுள்ளது. அத்துடன் மாதாந்தம் தெரிவு செய்யப்படும் மாபெரும் வெற்றியாளருக்கு 150 இலட்சம் ரூபாய் பெறுமதியான மிட்சுபிசி மொன்டெரோ SUV ரக மோட்டார் வண்டிகளை மாதாந்தம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
“Cash Bonanza” களியாட்டம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் பரிசளிப்பு விழாவும் குளியாப்பிட்டிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அன்றைய தினம் இடம்பெற்ற இசை நிகழ்வின் பிரபல இசைக்குழுவான ‘சன் பிளவர்’ இசைக்குழுவினர் இசை வழங்கியிருந்ததுடன் இலங்கையின் முன்னணி இசைக்கலைஞர்கள் இவ்விசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
“Cash Bonanza” 2016 பரிசளிப்புத்திட்டத்தின் ஜூலை மாதத்தின் மாதாந்த சீட்டிழுப்பின் மாபெரும் வெற்றியாளராக களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த விஜித் ரொட்ரிகோ மிட்சுபிசி மொன்டெரோ SUV ரக மோட்டார் வாகனத்தை மொபிடெல் நிறுவனத்தின் பிரதான செயற்பட்டு அதிகாரி நளின் பெரேராவிடமிருந்து பெற்றுக்கொண்டார். இது வரை 7 வெற்றியாளர்கள் மொன்டரோ ரக வாகனத்தை பரிசாகப் பெற்றுள்ளதுடன் “Cash Bonanza” 2016 பரிசளிப்புதிட்டத்தின் மூலம் இதுவரை 2,040 லட்சம் ரூபாய் பெறுமதி மிக்க பணப்பரிசுசுள் 394,056 மொபிடெல் வாடிக்கையாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வையொட்டி அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் சிறுவர்களுக்கான “Cash Bonanza” மொபிடெல் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அனுபவிப்பதற்கான மொபிடெல் சேவை மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். அத்துடன் மக்களின் நலன் கருதி அன்றைய தினம் வருகை தந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு 1,000 மூக்குக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago