2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

127 வருட கால முன்னேற்றத்தை கொண்டாடும் Baurs

Freelancer   / 2024 நவம்பர் 29 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

Baurs என அறியப்படும் A. Baur & Co. (Pvt.) Ltd. நிறுவனம், இந்த ஆண்டு தனது வியாபார அலகுகளில் 127 வருட கால தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றை கொண்டாடுகின்றது.

2021 ஆம் ஆண்டில், நாடு விவசாயத் துறையில் சேதன உரத்தை பயன்படுத்தும் தீர்மானத்தை மேற்கொண்ட போது, தன்னகத்தே கொண்டுள்ள நீண்ட கால ஆய்வு மற்றும் விருத்தி முயற்சிகள் மற்றும் நிலைபேறான சேதன விவசாயத்துக்கான திரண்ட பிரதான கருப்பொருள் ஆகியவற்றைக் கொண்டும், சுவிட்ஸர்லாந்தை தளமாகக் கொண்ட FiBL மற்றும் HAFL ஆகியவற்றின் நிபுணர்களுடன், உள்நாட்டைச் சேர்ந்த விவசாயத்துறையின் பங்காளர்களையும் இணைத்து அந்த சவாலை Baurs ஏற்றிருந்தது.

2018 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட பரிசோதனைகள் வெற்றியளித்திருந்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் முற்பகுதியில், சுப்பர் யூரியா வணிக விற்பனைகள் ஆரம்பிக்கப்படுவதாக அறிவித்திருந்தது. நைதரசன் இரட்டை உறுதியாக்கியைக் கொண்ட சுப்பர் யூரியா, அமோனியா ஆவியாதலையும், மண்ணில் நைரசன் உரம் நைற்றேற்றம் அடைதலையும் குறைப்பதுடன், நைதரசன் உர பிரயோகத்தை வினைத்திறனான முறையில் மேற்கொண்டு, விளைச்சலை அதிகரிக்கச் செய்து, சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைத்து, நிலைபேறான விவசாய செயன்முறைகளை ஊக்குவிக்கின்றது. அதனூடாக நாடு முழுவதிலும் சமூகத்தார் மத்தியில் ஆரோக்கியமான உணவை பெற்றுக் கொடுப்பதில் பங்களிப்புச் செய்கின்றது.

தனது பரந்த விநியோகத்தர் வலையமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த சேவை மற்றும் தொழினுட்ப ஒன்றிணைப்பு போன்றவற்றினூடாக, அதன் மருந்துப் பொருட்கள் வியாபாரம் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டில், புகழ்பெற்ற பல்தேசிய மருந்தாக்கல் நிறுவனமாகத் திகழும் GSK இன், பரிந்துரைக்கப்படும் மருந்துப் பொருட்கள் மற்றும் வக்சீன்களை இலங்கையில் இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஏக உரிமைக்கான உடன்படிக்கையில் Baurs கைச்சாத்திட்டிருந்தது. உலகளாவிய ரீதியிலான சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களைக் கொண்ட தனது பிரிவுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஜேர்மன் பல்தேசிய மருத்துவ சாதன நிறுவனமான Fresenius Medical Care Lanka இன் இலங்கைச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு Baurs கைகோர்த்திருந்தது.

தனது டிஜிட்டல் மாற்றியமைப்பு முயற்சிகளில் Baurs நீண்ட தூரம் பயணித்துள்ளது. வெறும் நடமாடல், தரவு மற்றும் பகுப்பாய்வு போன்றவற்றுக்கு அப்பால் sales force automation ஐ கொண்டு சென்று, பல்வேறு வியாபாரங்கள் மற்றும் நாளிகைகளை பரந்தளவில் ஒன்றிணைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், சைபர் பாதுகாப்பு மற்றும் இடர் மீட்சி ஏற்பாடுகளையும், ML, AI மற்றும் IoT போன்ற இதர செயற்பாடுகளையும் பெருமளவில் மேற்கொண்ட வண்ணமுள்ளது. அதன் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் அனோஜா பஸ்நாயக்க, பல திட்டங்களை முன்னின்று வழிநடத்துவதுடன், இலங்கை கணனி சங்கத்தின் 2023 ஆம் ஆண்டின் அறிமுக தேசிய CIO நிரலில் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல் கல்வியை தனது Swiss Hotel Management Academy (SHMA) மற்றும் நிலைபேறான வளர்ச்சிக்கான திறன்கள் (SSG) செயற்திட்டத்தினூடாக Baurs வழங்குகின்றது. மாணவர்களுக்கு விருந்தோம்பல் தொடர்பான தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுப்பது மாத்திரமன்றி, பிரயோக திறன்களையும், உலகத்தரமான அனுபவம் மற்றும் மென் திறன் விருத்தி ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் சுவிஸ் அரசாங்கத்தின் நிதியளிப்பில் இந்தப் பங்காண்மைத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் நாடு முழுவதிலும் 10 பயிலல் நிலையங்களை திறந்துள்ளதனூடாக SSG செயற்திட்டம் புதிய மைல்கல்லை எய்தியுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் 2,240 இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் இலக்கை கொண்டுள்ளது.

நிறுவனத்தின் நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலில், அதன் தலைமையகத்தில் 168.56 kWp கொள்ளளவை கொண்ட புதிய சூரியபடல் நிறுவுகையை மேற்கொண்டிருந்தது. நிறுவனத்தின் 60 சதவீதமான வலுத் தேவையை நிவர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளதுடன், வருடாந்தம் 233,792 kWh பிறப்பிக்கும் ஆற்றலைக் கொண்டது. இதனூடாக Baurs நிறுவனத்துக்கு 170,622கிலோகிராம் காபன் வெளியீடுகளை ஒவ்வொரு ஆண்டும் தவிர்ப்பதற்கும், சூழலில் அதன் காபன் வெளியீட்டை குறைப்பதிலும் பங்களிப்பு வழங்குகின்றது. 7 MW சோலர் கட்டமைப்பை அதன் களஞ்சியசாலைகள் மற்றும் இதர வளாகங்களில் நிறுவுவதற்கு முதலீடுகளை மேற்கொள்ள Baurs திட்டமிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .