2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

டொயோடா லங்கா நிறுவனத்தின் மூலம் பின்தங்கிய பாடசாலைகளில் ஓவிய பயிற்சி பட்டறை

A.P.Mathan   / 2011 நவம்பர் 23 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டொயோடா லங்கா நிறுவனம் நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் 'கனவு கார்' ஓவிய போட்டிக்கு (Dream Car Art Contest) மேலதிகமாக பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் மாணவ மாணவியருக்கு ஓவிய பயிற்சி பட்டறையை முன்னெடுத்து ஓவிய உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வருகிறது. இதன் முதல் அங்கம் சியமலாண்டுவ மஹா வித்தியாலயம், காத்தான்குடி தேசிய பாடசாலை மற்றும் தம்பான மஹா வித்தியாலயம் போன்றவற்றில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளின் பிரதம அதிதியாக ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்து பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றும் கீர்த்தி திசாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.

பின்தங்கிய பிரதேச பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவியருக்கு ஓவியக் கலை தொடர்பான சிறந்த விளக்கங்களை வழங்குவதற்காகவும், அதற்கு தேவையான உபகரணங்கள் தொடர்பில் அறிவை வழங்குவதற்காகவும் டொயோடா லங்கா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் போதனைகளை வழங்குவதற்காக களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் இந்திரநாத் தேநுவர கலந்து கொண்டிருந்தார். இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் ஓவிய உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வு குறித்து டொயோடா லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஹர அதுகோரள கருத்து தெரிவிக்கையில், 'சர்வதேச ரீதியில் 80இற்கும் அதிகமான நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த 'கனவு கார்' ஓவிய போட்டியை இலங்கையிலும் நடத்துவதற்கு நாம் தீர்மானித்தமை இந்நாட்டு மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுக்கவேண்டும் எனும் நோக்கத்திலாகும். இந்த போட்டிக்கு இது வரை நம்நாட்டு மாணவர்கள் அதிகளவு வரவேற்பை வெளிக்காட்டியுள்ளனர். ஆயினும், வசதிகள் படைத்த மாணவர்களை போன்றே பின்தங்கிய வறிய மாணவர்களுக்கும் இந்த போட்டியில் பங்குபற்ற செய்ய வேண்டும் என்பது டொயோடா லங்கா நிறுவனத்தின் நோக்கமாகும். இதன் காரணமாக நாம் எமது சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ஒன்றாக இந்த பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகளை முன்னெடுக்க தீர்மானித்தோம். இதன் மூலம் இந்த பின்தங்கிய மாணவர்களுக்கும் 'கனவு கார்' ஓவிய போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும்' என்றார்.

80 உலக நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் 'கனவு கார்' ஓவிய போட்டியானது இம்முறை இலங்கையில் முதற்தடவையாக இடம்பெறுகிறது. 5 – 15 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் 'கனவு கார்' எனும் தலைப்புக்கு அமைவாக விரும்பியளவு ஓவியங்களை வரைந்து அனுப்பி வைக்க முடியும். ஒவ்வொரு ஓவியத்துடனும் டொயோடா லங்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு இணைக்கப்படல் வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி திகதி 2012 ஜனவரி 31ஆம் திகதியாகும். மேலும் இரு ஓவிய பயிற்சி பட்டறைகள் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குணுகொலபலஸ்ஸ வித்தியாலயத்திலும், மெனிக்பாம் முகாமிலும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளன.

சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயம், காத்தான்குடி தேசிய பாடசாலை மற்றும் தம்பான வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்ற ஓவிய பயிற்சி பட்டறையில் அந்த பாடசாலைகளின் அதிபர்கள், ஊவா மாகாணத்தின் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவின் ஆலோசகர் கே.எம்.ஜயசூரிய, தம்பான பகுதியின் வதிவிட தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோ, டொயோடா லங்கா நிறுவனத்தின் மனிதவள பிரிவின் பொது முகாமையாளர் திமித்திரியஸ் பெரேரா, மின்லோ மீடியா ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் தமித்த விக்ரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண படை கட்டளை தளபதி கேணல் திலகரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X