A.P.Mathan / 2015 மே 27 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குநரான மொபிடெல், அதன் வாடிக்கையாளர்கள் பணத்தை வைப்புச் செய்யவும், வாழ்க்கைச் செலவுக் கட்டணங்கள், காப்புறுதிக் கொடுப்பனவுகள் மற்றும் குத்தகைக் கட்டணங்கள் என்பனவற்றை mCash மூலம் செலுத்தவுமான, புதிய சந்தர்ப்பத்தை வழங்கவென, அபான்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
மொபிடெல் மற்றும் மொபிடெல் அல்லாத வாடிக்கையாளர்கள் அனைவரும் mCash மூலம் வழங்கப்படும் சிறந்த அனுகூலங்களின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் mCash அனைத்து அபான்ஸ் காட்சியறைகளிலும் கிடைக்கக் கூடியதாகவுள்ளது. mCash சகல விடயங்களையும், ஒரே இடத்தில் உள்ளடக்கிய சேவையாகும். பலநோக்கு நிறுவனங்கள் கையடக்கத் தொலைபேசியை உபயோகித்து, வாழ்க்கைச் செலவுக் கட்டணங்களையும், காப்புறுதிக் கொடுப்பனவுகளையும் மற்றும் குத்தகைக் கட்டணங்களையும் செலுத்துவதற்கான வசதியை வழங்குகிறது.
இச்சேவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுவதுடன், உயர்மட்ட mCash, cash-in சேவையையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் mCash கணக்கினை பதிவு செய்து mCash கணக்கில் சிரமம் இன்றி பணத்தை வைப்புச் செய்ய முடியும்.
நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள அபான்ஸ் காட்சியறைகளில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட mCash சேவைகளுடன் mCash சில்லறை வர்த்தக வலையமைப்பும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மொபிடெலின் சேவைகள் மேலும் விஸ்தரிக்கப்படுமெனவும், நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள வாடிக்கையாளர்களின் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மொபிடெல் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை தன்வசம் கொண்டு துரித வளர்ச்சி கண்டுள்ளதுடன், இலங்கையில் தனக்கென தனி இடமொன்றையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட mCash, இலங்கை மத்திய வங்கியின் அனுமதியை பெற்றுள்ளதுடன் மொபிடெல் வாடிக்கையாளர்கள் மொபிடெல் நிதிக் கணக்கு ஒன்றை வைத்திருக்கவும், அதன் அதிநவீன சேவைகள் மூலம் சகல நிதி நடவடிக்கைகளையும் முற்றிலும் புதிய வசதியான வழிமுறை மூலம் அனுபவிக்கவும் முடியும். வாடிக்கையாளர்கள் கருமபீடங்கள் ஊடாகவும் mCash ஒன்லைன் மூலமாகவும் வாழ்கைச்செலவுக் கட்டணங்களையும், காப்புறுதிக் கொடுப்பனவுகளையும், குத்தகைக் கட்டணங்களையும் செலுத்துவதோடு, கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்கும், பெற்றுக்கொண்ட சேவைகளுக்கும் பணத்தைச் செலுத்தவும், அதேவேளை பணத்தை வைப்புச் செய்யவும், அதனைப் பெற்றுக்கொள்ள அல்லது பரிமாற்றம் செய்யவும் முடியும்.
21 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago