Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 19 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய இராச்சியத்தை மையமாகக் கொண்டு செயற்படும் கீர்த்திமிக்க 'த பேங்கர்' சஞ்சிகையின் உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகளின் தர வரிசையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கொமர்ஷல் வங்கி இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டுகளாக இந்த சாதனையை படைத்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கி இதுவாகும்.
2014ம் நிதி ஆண்டுக்கான வங்கியின் முக்கிய செயற்பாட்டு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தர நிலை வழங்கப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி 2015ல் இந்த வரிசையில் 39வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதல் வரிசை மூலதனம், சொத்துக்கள், மூலதன சொத்து விகிதாசாரம், வரிக்கு முந்திய இலாபங்கள், மூலதன மீள் வருமானம், சொத்துக்களின் மீள் வருமானம், BIS (Basel) மூலதன விகிதாசாரம், மொத்தக் கடன்கள் மீதான NPL, சொத்துக்களின் விகிதாசாரங்களுக்கான கடன்கள், இடர் சுமை சொத்து (RWA) மொத்த சொத்துக்கள் விகிதாசாரம் (TA) மற்றும் செலவு வருவாய் விகிதாசாரம் என்பனவற்றைக் கருத்திற் கொண்டே ஆயிரம் தலைசிறந்த வங்கிகள் தரப்படுத்தப்படுகின்றன.
உலகில் உள்ள ஐயாயிரத்துக்கும் அதிகமான மிகப் பெரிய வங்கிகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ஆயிரம் வங்கிகள் தெரிவு செய்யப்படுகின்றன. வங்கிகளுக்கான தரம் மற்றும் அவை பற்றிய ஆய்வு என்பனவற்றுக்கான ஒரு அங்கீகாரமாக இது உலகளாவிய நிதிச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 1970ல் தொடங்கப்பட்ட இந்த முறை மூலம் வெளியிடப்படும் வங்கிகளின் தரப்படுத்தல் வரிசை சிரேஷ்ட வங்கியாளர்கள், கூட்டாண்மை பொருளாளர்கள், கூட்டாண்மை நிதியாளர்கள், தொழிற்சார் சேவைகள் சமூகம் என்பன உட்பட வங்கித் துறையோடு தொடர்புடைய சகலராலும் தமது அன்றாட தேவைகளுக்காக வருடந்தோறும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
'கொமர்ஷல் வங்கி அதன் செயற்பாடுகளில் தொடர்ச்சியான ஆற்றல்கள் வெளிப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது. எனவே உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இடம் பிடிக்க கிடைத்துள்ளமை எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது' என்று கூறினார் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைNவுற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம். 'நாம் சவால்கள் மிக்க மாற்றமடைந்து வரும் ஒரு சூழலில் பணியாற்றி வருகின்றோம். இந்நிலையில் ஏனைய சர்வதேச வங்கிகளுக்கு நிகரான இந்த நிலையை அடைவது எமது வங்கியின் உறுதி மற்றும் ஸ்திரப்பாடு என்பனவற்றையே பிரதிபலிக்கின்றது.
2015ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் முதல் மூன்று இடங்களும் கடந்த ஆண்டில் இருந்து மாற்றம் அடையாமல் அவ்வாறே உள்ளன. ICBC (சீனா), சீனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி, ஜே.பி.மோர்கன் சேஸ் அன்ட் கோ (அமெரிக்கா) என்பனவே முறையே முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள வங்கிகளுள் நான்கு வங்கிகள் சீன வங்கிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் நான்கு வங்கிகள் அமெரிக்காவை சேர்ந்தவை. பிரிட்டன் மற்றும்; ஜப்பான் என்பன ஏனைய இரண்டு இடங்களையும் பிடித்துள்ளன.
பினான்ஸியல் டைம்ஸ் பிஸ்னஸ் நிறுவனமே 'த பேங்கர்' சஞ்சிகையை வெளியிடுகின்றது. இது பினான்ஸியல் டைம்ஸ் குழுமத்தின் விஷேட வெளியீடுகள் மற்றும் மாநாட்டு பிரிவின் வெளியீடாகும்.
2015ம் ஆண்டுக்கான மீளாய்வில் கொமர்ஷல் வங்கி வரிக்கு முந்திய இலாபமாக 15.7 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. அதன் கடன் புத்தக மீதி 463.6 பில்லியன் ரூபா, வைப்புக்கள் 529.4 பில்லியன் ரூபா, மொத்த வருமானம் 74.4 பில்லியன் ரூபா, சொத்துக்கள் 795.6 பில்லியன் ரூபா, முதல் வரிசை மூலதன விகிதாசாரம் 12.93 வீதம் என தனது பதிவுகளைக் கொண்டுள்ளது.
கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 242 கிளைகளுடனும், 610 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. 2014ம் ஆண்டில் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2015ல் பினான்ஸ் ஆசியாவால் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி ஏனைய பல சர்வதேச சஞ்சிகைகள் மூலமாகவும் கடந்த பல ஆண்டுகளில் இலங்கையின் தலைசிறந்த வங்கி என தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 2013 மற்றும் 2014ம் ஆணடுகளில்; இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த பத்தாண்டுகளாக இலங்கையின் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கியாக LMD தர வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. அத்தோடு கடந்த நான்கு வருடங்களாக இதே தர வரிசையில் இலங்கையின் ஒட்டு மொத்த கூட்டாண்மை நிறுவனங்களுள் மிகவும் கௌரவத்துக்குரிய இரண்டாவது நிறுவனம் என்ற இடத்தையும் தக்கவைத்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இதே LMD சஞ்சிகையின் தரவரிசையில் மிகவும் நேர்மையான நிறுவனங்களுள் முதலாவது இடத்தையும் தன்னகத்தே தக்கவைத்துள்ளது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago