2025 ஜூலை 17, வியாழக்கிழமை

2019இல் Huawei வருமானம் அமெ. டொ.125 பில். எய்துமென எதிர்பார்ப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஆம் வருடம் Huawei ஐப் பொறுத்தவரையில் கடினமான ஓர் ஆண்டாக அமையவுள்ள போதிலும், மொத்த ஆண்டிலும் 125 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வருவாயாக ஈட்டும் இலக்கினை நிறுவனம் கொண்டுள்ளதாக Huawei நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஸ்தாபகருமான ரென் ஸெங்பெய் குறிப்பிட்டுள்ளார். 

2018ஆம் ஆண்டில் Huawei நிறுவனம் ஈட்டியுள்ள மொத்த வருமானத் தொகையை அது இன்னமும் உத்தியோகபூர்வமாக வெளியிடாத போதிலும், தொழில்நுட்ப பெரு நிறுவனத்தின் சுழற்சி அடிப்பிடையிலான பணிப்பாளர் சபைத் தலைவர்களுள் ஒருவரான எரிக் ஸு, 2018 நவம்பரில் அதன் விற்பனைத் தொகையானது 100 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையைக் கடக்கும் என அவர் அண்மையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“2019ஆம் ஆண்டில் சர்வதேச சந்தைகளில் சவால்களுக்கும், கஷ்டங்களுக்கும் நாம் முகங்கொடுக்க நேரிடலாம். அதனாலேயே அடுத்த ஆண்டில் எமது வளர்ச்சியானது, 20 சதவீதத்திலும் குறைவாகவே அமையும் என நான் குறிப்பிடுகின்றேன்” என்று ரென் குறிப்பிட்டார்.

மிகவும் அரிதான ஒரு நிகழ்வாக, சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ரென் ஸெங்பெய், நிறுவனத்தின் சாதனங்களுக்கு இடமளிப்பதால் சீன அரசாங்கம் தனது தேசத்தின் தொலைத்தொடர்பாடல் வலையமைப்புக்குள் பின்கதவால் ஊடுருவும் என்று, அமெரிக்க அரசாங்கத்தால் எழுப்பப்பட்டுள்ள அச்சம் தொடர்பில், ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார். “Huawei நிறுவனம் தரவு விவரங்கள் எவற்றையும் ஒரு போதும் பீஜிங்கிடம் கையளித்திருக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X