2025 மே 19, திங்கட்கிழமை

AIA வடக்கில் பத்து வருட பூர்த்திக் கொண்டாட்டம்

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் தனது 10 வருட பூர்த்தியைக் கொண்டாடும் AIA ஸ்ரீ லங்கா, யாழ்ப்பாணம் இளையதம்பி இந்து வித்தியாலயத்தை வர்ணப்பூச்சை மேற்கொள்ள முன்வந்திருந்தது. நாடு முழுவதிலுமிருந்தான கிளை அலுவலகங்கள், தலைமைக் காரியாலயத்திலிருந்து வருகை தந்திருந்த தன்னார்வ ஊழியர்கள் இப்பாடசாலைக் கட்டடங்களைச் சுத்தம் செய்து, வர்ணப்பூச்சு பூசும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் புதிய பாடசாலைச் சீருடைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன. 

இப்பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக AIA இனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மற்றுமொரு திட்டமாகவே இது அமைந்திருந்தது. 100 வருடப் பழைமை வாய்ந்த வட்டுக்கோட்டை கார்த்திகேயா வித்தியாலயம் உட்பட, மூன்றுக்கும் அதிகமான மற்றைய பிரபல யாழ் பாடசாலைகள், AIA இனால் ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்டு, வர்ணப்பூச்சு பூசப்பட்டிருந்தன. 

இந்த விசேட முயற்சியானது, யாழில் AIA இனது 10ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டமாகவே அமைந்திருந்தது. ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களானது, பாடசாலைத் திட்டத்தையே முன்னெடுத்திருந்ததுடன், AIA இன் மாகாண முகாமையாளர் கந்தசாமி செல்வராஜன், கிளை முகாமையாளர்கள் மற்றும் AIA இன் வடக்கு, கிழக்கு அலுவலகங்களிலிருந்து வருகை தந்திருந்த அணிகளாலேயே ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X