Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 16 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
Nokia அலைபேசித் தொலைபேசிகளின் உற்பத்தியாளரான HMD Global நிறுவனம், Google இனால் Android One நிகழ்ச்சித் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைபேசித் தொகுதியொன்றுடன் கூடிய முதலாவது பூகோள பங்குதாரராக மாறி தூய, அறிவுபூர்வமான பாதுகாப்பான புதியதோர் Android அனுபவமொன்றை உங்களுக்குக் கொண்டுவரும் வாக்குறுதியை நிறைவேற்றியது.
இதன் காரணமாக Android One தளத்தின் அடிப்படையில் செயற்படும் அலைபேசிகளுக்கான இற்றைப்படுத்தல்கள், பாதுகாப்புத் திட்டுகள், மற்றும் Chrome போன்ற Google பிரயோகங்களுக்குரிய (Apps) அதிகபட்ச அனுபவத்தை மற்றவர்களை விடவும் முந்திக் கொண்டு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பிரதானமான நன்மையாக அமைகிறது.
இது தவிர Android One இன் கீழ் செயற்படும் ஒவ்வொரு தொலைபேசி மாதிரிக்கும், ஒரே விதமான தூய அனுபவமொன்று கிடைக்கிறது. அந்தந்தத் தொலைபேசி மாதிரிகளிலுள்ள சிறப்பம்சங்களில் இவ்வனுபவம் மேம்படுகிறது.
HMD நிறுவனத்தில் இலங்கையின் விற்பனை மேம்பாட்டு பிரதானி, கயான் விஜேதிலக்க, “Android One தளத்தில் செயற்படும் புதிய Nokia கையடக்கத் தொலைபேசி தொகுதி, வாடிக்கையாளர்கள் திறன்பேசி ஒன்றை தேர்ந்தெடுப்பதில் செல்வாக்கைச் செலுத்தும் முக்கிய அம்சமான வேகமான அனுபவமும், நீண்ட பற்றரி ஆயுட் காலத்தோடும் கூடியது.
தற்காலத்தில் அதிகமானோர், நாள் முழுவதும் வெளியுலகோடு இணைந்திருக்கும் நோக்கில், தமது அலைபேசியை விடப் பெரிய Powerbank களை எடுத்துச் செல்கிறார்கள்.
இப்போது வாடிக்கையாளர்கள், தமது தேவைக்குப் பொருத்தமான அலைபேசியொன்றைத் தேர்ந்தெடுக்கும் உயர் தரத்திலான அறிவுபூர்வமான, பாதுகாப்பான மற்றும் எளிமையாகச் சொல்வதாயின் மிகச் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் அனுபவமொன்று கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.
இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற புதிய Nokia திறன்பேசி, இரண்டு - Nokia7 Plus மற்றும் புதிய Nokia 6 - Google இனால் வடிவமைக்கப்பட்ட உயர் தரத்திலான மென்பொருள் அனுபவமொன்றைப் பெற்றுத்தந்து Android One குடும்பத்தில் இணைந்தது.
இத்தொலைபேசி மாதிரிகளை Google இனால் தயாரிக்கப்படும் நவீன AI தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்படும் வசதிகள் மற்றும் உயர் தரத்திலான பாதுகாப்பு காரணமாக அதிக காலம் புதிய தொலைபேசியைப் போன்றே பாவிக்க முடியும்.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025