2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Blue Hills Residencies நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Gavitha   / 2016 ஜூலை 21 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை, இல. 22, இனிஷியம் வீதியில் Blue Hills Residencies சொகுசு தொடர்மனை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிர்மாணப் பணிகள் ஜூலை 10ஆம் திகதி, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வே.இரத்தினவேலின் பங்குபற்றலுடன் சமய சம்பிரதாய முறைப்படி ஆரம்பமாகியிருந்தன. இந்தத் தொடர்மனையின் நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல்லை, ஜெனரல் என்ஜினியரிங் சேர்விஸ் (பிரைவட்) லிமிட்டெடில் பல வருடங்கள் திட்ட முகாமையாளராக பணியாற்றிய சிரேஷ்ட பொறியியலாளர் மூ.கந்தையா நாட்டியிருந்தார்.

28 சொகுசு அலகுகளை கொண்டமையவுள்ள இந்தத் தொடர்மனைகள் அனைத்தும் 3 அல்லது 4 படுக்கையறைகளை கொண்டமைந்திருக்கும். எட்டு மாடிகளில் நிர்மாணிக்கப்படும், இந்த Blue Hills தொடர்மனையின் நிர்மாணப்பணிகளின் போது, உயர் தரம் வாய்ந்த கம்பிகள், பொருத்தும் சாதனங்கள் போன்றன பயன்படுத்தப்படவுள்ளதுடன், நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும் பொறியியலாளர்கள் அனைவரும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தமது பொறியியல் பட்டத்தை பூர்த்தி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Blue Hills தொடர்மனையின் நிர்மாணப் பணிகளை டி.ரி. ராஜசேகரன் மேற்பார்வை செய்கிறார். இவர் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனத்தின் ஸ்தாபகர் வெக்டர் வேலாயுதம் என மாணவர்களால் அழைக்கப்பட்ட உயர் தர கணிதபாட ஆசிரியரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர்மனைக்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன், இதுவரையில் நீதிபதிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் முற்பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரதான வர்த்தக நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள் போன்றவற்றுக்கு அருகாமையில் இந்த தொடர்மனை நிர்மாணிக்கப்படவுள்ளது. இது நான்கு பிரிவுகளை கொண்டிருக்கும்.

Blue Hills மூலமாக இதுவரையில் இரு தொடர்மனைகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, வீடுகள் குடியிருப்பாளர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான உறுதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

தெஹிவளை, காலி வீதியில் தற்போது மேலுமொரு தொடர்மனையின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளது.

மாறிவரும் வாழ்க்கை முறைக்கமைய, வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு Blue Hills Residencies நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தெரிவுகளுக்கமைய, நிர்மாணப்பணிகளின் போது, உள்ளக நிர்மாணச் செயற்பாடுகளில் மாற்றங்களை செய்து கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X