2021 ஜூன் 14, திங்கட்கிழமை

‘Business Today’ Top – 30 தரப்படுத்தலில் பீப்பள்ஸ் லீசிங் உள்ளடக்கம்

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீப்பள்ஸ் லீசிங், அண்மையில் இடம்பெற்ற வருடாந்த ‘Business Today Top – 30’ (2018/19) விருதுகள் வழங்கும் நிகழ்வில் 13ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த விருது வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் தரவுகளின் பிரகாரம் ‘Business Today Top – 30’ தரப்படுத்தல் முன்னெடுக்கப்படுவதுடன், குறிப்பிட்ட ஆண்டில் நிறுவனங்கள் பதிவு செய்திருந்த வியாபார நிதிப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் வழங்கப்படுகின்றது.

பீப்பள்ஸ் லீசிங் நிர்வாகத்தின் சார்பாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

இந்த தரப்படுத்தலில் பீப்பள்ஸ் லீசிங் உயர்வடைந்திருந்தமை ஊடாக, நிறுவனத்தின் வளர்ச்சி பிரதிபலிக்கப்பட்டிருந்தது.

கம்பனிகளின் பங்கு பெறுமதி, வருமானம், வரிக்கு பிந்திய இலாபம், மூலதனத்தின் மீதான வருமானம், பங்கொன்றின் மீதான வருமானம், சந்தை மூலதனவாக்கம், பங்கின் விலை மற்றும் இதர பெறுமதி சேர் அம்சங்கள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .