2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

DFCC வங்கி சௌகரியமான, பாதுகாப்பான வங்கிச் சேவையை வழங்குகிறது

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஒரு முதன்மையான வணிக வங்கியாகவும், அனைவருக்குமுரிய வங்கியாகவும் திகழ்ந்து வருகின்ற DFCC வங்கி, தனது விசுவாசம்மிக்க வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து தேசத்துக்குச் சேவை செய்வதில் உறுதி பூண்டுள்ளது.

நாட்டில் நெருக்கடி நிலவுகின்ற இந்த காலகட்டத்தில், டிஜிட்டல் சேவைகளின் மூலமும் தங்குதடையின்றி நிதிச் சேவைகளை வழங்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அரசு மற்றும் மத்திய வங்கி உத்தரவுகளின்படி தீவிரமாக செயற்படுவதன் மூலமும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவையை வழங்குவதில் தான் உறுதி பூண்டுள்ளதை வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது.

DFCC டிஜிட்டல் வங்கிச் சேவைகள்

தனது டிஜிட்டல் வங்கிச் சேவை மார்க்கங்களின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அதன் பன்முக உற்பத்திகள் மற்றும் சேவைகளின் அதிசிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்காக DFCC வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது. DFCC Virtual Wallet மற்றும் DFCC இணைய வங்கிச்சேவை ஆகியன உங்கள் வீட்டிலிருந்தே பாதுகாப்புடன் நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் பயன்பாட்டு கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் போன்ற வழக்கமான நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான சௌகரியத்தை உங்களுக்கு வழங்குகின்றன.

மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, இப்போது வாடிக்கையாளர்கள் 'உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்' (KYC) சரிபார்ப்புகளைச் செய்வதற்காக கிளையொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவையின்றி, இணையத்தின் மூலமாக இந்த வசதிகளை அடையப்பெற்று அவற்றை முன்னெடுக்க முடியும். மேலும், DFCC Pay App இனைப் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் VISA QR, LANKA QR, Just Pay மற்றும் POS இயந்திரங்கள் மூலம் பணக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம். அவை அனைத்தும் ஞசு கொடுப்பனவுகளை செயலாக்கும் வகையில் ஆக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளருக்கு தொடுகை இல்லாத (contactless) பரிவர்த்தனையின் அனுபவத்தை வழங்குவதுடன், இது நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக மிக முக்கியமான ஒரு பயன்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

DFCC வங்கி நடமாடும் சேவை (Bank on Wheels Service) கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கடினமான காலகட்டத்தில் பணத்தை மீளப் பெறுவதற்கான தேவையைப் புரிந்துகொண்டு, DFCC வங்கி சமீபத்தில் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்குச் சென்று அவர்கள் பணத்தை மீளப்பெறுவதற்கு இடமளிப்பதற்கும், வங்கி கணக்கு மீதி சரிபார்ப்பு சேவைகளை வீட்டை விட்டு வெளியில் வந்து கிளையொன்றுக்கு செல்ல வேண்டிய தேவையின்றி வீட்டிலேயே தங்கி அவற்றை அறிந்து கொள்வதை ஊக்குவிப்பதற்கும் 'நடமாடும் வங்கிச் சேவையை' வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்குச் செல்லும் வகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்து னுகுஊஊ வங்கி வாடிக்கையாளர்களும் பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் உள்நாட்டு வங்கிகளால் வழங்கப்பட்ட வீசா, மாஸ்டர்கார்ட், அமெக்ஸ் மற்றும் JCB டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், ரூபா 150,000 வரையான தொகையை மீளப் பெற்றுக்கொள்ளவும் முடியும். தெஹிவளை, கல்கிசை, மோதரை, மொரட்டுவை, நாவல, மாலபே, மத்தேகொட, நாரஹேன்பிட்டி, பன்னிப்பிட்டிய, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடமாடும் வங்கிச் சேவை கிடைக்கப்பெறுவதுடன், எதிர்வரும் நாட்களில் மேற்கு மாகாணத்தின் ஏனைய பல பாகங்களிலும் கிடைக்கப்பெறவுள்ளது.

கிளை நடவடிக்கைகள்

மத்திய வங்கியின் உத்தரவின்படி, ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் மு.ப 9.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை பரிவர்த்தனைகளை வழங்குவதற்காக DFCC வங்கியின் தெரிவு செய்யப்பட்ட கிளைகளின் கருமபீடங்கள் திறந்திருக்கும். எவ்வாறாயினும், நிதி பரிவர்த்தனைகளை முன்னெடுப்பதற்கு கிளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்த DFCC வங்கி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை  பயன்படுத்தி வருவதுடன், கிளை மற்றும் ஏடிஎம் வளாகங்களுக்குள் கை சுத்திகரிப்பான் (ஹேன்ட்வோஷ்) திரவங்கள் மற்றும் கைகளைக் கழுவும் வாஷ்பேசின்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் தொடுகைக்குட்படுகின்ற மேற்பரப்புகள், மின்தூக்கிகள் (லிஃப்ட்), ஏடிஎம் இயந்திரங்கள் பணியிடத்தில் நல்ல சுகாதார நடைமுறைகளை பராமரிப்பதற்காக வழக்கமாக தொற்றுநீக்கம் செய்யப்படும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது.

 

கொவிட்-19 காரணமாக வழங்கப்படுகின்ற நிதிச் சலுகைகள்

மேலும், மத்திய வங்கியின் உத்தரவு மற்றும் இலங்கை அரசு வழங்கிய நிவாரண சலுகை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உலகளாவியரீதியில் பரவி வருகின்ற கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சலுகைகளை வழங்க னுகுஊஊ வங்கி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 2020 ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன்னர் கோரிக்கைக் கடிதத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளைப் பெற முடியும், மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை DFCC வங்கியின் 24 மணி நேர  தொடர்பு மையத்தை 0112 35 00 00 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X