2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

EDEX கண்காட்சி மற்றும் தொழில் சந்தை 2016

Gavitha   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டம்பர் மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளில் இலங்கைக் கண்காட்சி மற்றும் மாநாடு நிலையத்தில் EDEX   கண்காட்சி மற்றும் தொழில் சந்தை 2016 நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

பாடசாலைக்கல்வியை முடித்த மாணவர்களையும் தொழில் தேடுபவர்களையும் இலக்காகக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்ற இந்நிகழ்வில் வழமை போலவே பலவிதமான தேர்வுகளும் வாய்ப்புகளும் திறமையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.

தொழில்சந்தையும் நட்டாண்டு கண்காட்சியில் சேர்க்கப்பட்டமையானது இந்நிகழ்வினை மேலும் மெருகூட்டி இருக்கிறது. உயர்கல்வி சார் தேடல்கள் மற்றும் தொழில்வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் சாதகமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளவும் ஒரு பெரும் கருவியாக இந்நிகழ்வு அமைகிறது.

உயர்கல்வி நிலையங்களின் பிரதிநிதிகளை மாணவர்களும் பெற்றோரும் நேரில் சந்தித்து பேசக்கூடியதும் வாய்ப்புகளை இனங்காணக்கூடியதும் சந்தேகங்களையும் மயக்கங்களையும் தீர்த்துக்கொள்ள கூடியதுமான இந்நிகழ்வில் திறமைசார் மாணவர்களுக்கு உடனடி அனுமதி, மொழி, பயிற்சி, உத்தியோகக் கற்கைகளும் முதுமாணி கற்கைநெறிகளும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களினால் வழங்கப்படுகின்றன.

கற்கைக்கான செலவு, புலமைப்பரிசில் திட்டங்கள், மேலும் மாணவர்களின் கனவுகளைத் துரிதமாக நிறைவேற்றும் வேறு வழிமுறைகளையும் நேரடியாக தெரிந்து கொள்ளவும் இந்நிகழ்வு ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்.

மேலதிகமாக இக்கண்காட்சியில் தொழில்சார் வழிகாட்டுதல் நடவடிக்கைகளும் தகுதி வாய்ந்தவர்களின் ஆலோசனைகளும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளக் கூடிய வகையில் நிபுணத்துவம் பெற்றவர்களினால் நடாத்தப்படும் கருத்தரங்குகளும் இடம்பெறவுள்ளன. எந்தத்துறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் முகமாக உளவியல்சார் வினாத்தாள் ஒன்றின் மூலம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான அடித்தளத்தைத் தீர்மானிக்கும் செயற்பாடும் நடைபெறும்.

சந்தைப்படுத்தல் மற்றும் கற்கை தொடர்பான சேவை வழங்குநர்களுக்கும் இந்நிகழ்வானது பொருத்தமான எதிர்கால மாணவர்களைக் கண்டறியும் வாய்ப்பாக அமையும் என்பதிலும் சந்தேகம்  இல்லை. அனைத்து நிறுவன அமைப்புகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரவும் இந்நிகழ்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X