Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 01 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச அங்கிகாரத்தை பெற்ற சிறப்புமிக்க மூன்றாம் நிலை கல்வி வாய்ப்புகள் பலவற்றை இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதற்கு IIHS (International Institute of Health Sciences) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தாதியியல்(Nursing), இயல் மருத்துவம் (Physiotheraphy), உயிரியல் மருத்துவ விஞ்ஞானம் (Bio medical Science) மற்றும் முகாமைத்துவம் (Management) ஆகிய பாடத் துறைகளில் டிப்ளோமாவிலிருந்து பட்டப்பின்படிப்பு வரை கல்வி கற்கும் வாய்ப்பை IIHS நிறுவனம் எமது நாட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றது.
அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள உலக அங்கிகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தப்படுகின்ற மேற்படி பாடநெறிகளை இலங்கையிலும் மேற் குறிப்பிட்ட நாடுகளிலும் பூர்த்தி செய்ய முடியுமென்பதோடு, தான் விரும்பும் நாட்டில் தொழில் புரிவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்;.
சாதாரணத் தர பரீட்சையை தொடர்ந்து IIHS நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கக்கூடிய இப் பயணத்தில் உங்களுக்கு சுமார் 26 வயதில் பட்டப்பின் படிப்பை முடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். IIHS நிறுவனத்துடன் இணைந்து பாடநெறிகளை மேற்கொள்வதற்கு சாதாரணத் தர பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு திறமைச் சித்தி (C) பெற்றிருக்க வேண்டுமென்பதோடு, அவ்வாறில்லாத மாணவர்களுக்கு IIHS அறிமுகப்படுத்துகின்ற சிறப்பு அடிப்படை பாடநெறியை பூர்த்தி செய்த பின்னர் மேற்படி பாடநெறிகளை கற்கின்ற வாய்ப்பை பெற முடியும்.
அதி சிறந்த ஆசிரியர் குழாமொன்றின் சேவையை வழங்கும் IIHS நிறுவனம் மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வாய்ப்பையும் பாடங்களுடன் தொடர்புடைய ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது.
35 minute ago
45 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
45 minute ago
58 minute ago
3 hours ago