2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

LRT ரயில் சேவைக்கு ஜப்பான் நிதியுதவி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் LRT ரயில் சேவைகளை நிறுவுவதுக்கு ஜப்பானிய அரசாங்கம் நிதியுதவிகளை வழங்க உறுதியளித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் Mono ரயில் அல்லது LRT கட்டமைப்பை நிறுவுவதா என இவ்வளவு காலமும் நிலவிய விவாதங்களுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜப்பானிய உயர் மட்டத்தூதுக்குழு, இலங்கையில்LRT ரயில் சேவைக் கட்டமைப்பை நிறுவுவதற்கு தாம் நிதியுதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இரு நாட்டு அரசாங்கங்களும் நாட்டில் LRT ரயில் சேவை கட்டமைப்பை நிறுவும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட தொழில்நுட்ப இனங்காணல் செயற்பாடுகளை இனங்காணவுள்ளன. அதனைத் தொடர்ந்து வெகுவிரைவில் இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகும்' என மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X