Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்கான உள்ளாடைகளை விற்பனை செய்வதில் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற நிறுவனமான ட்ரையம்ப் இன்டர்நஷனல், இந்த நத்தார் பண்டிகை காலத்தில் அதன் தொகுப்பில் MAGIC WIRE பிரா தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. பேஷன் ஆர்வலர்கள் மத்தியில் இந்த புதிய 'No Wire Sensation' தெரிவுகள் விருப்பத்துக்குரியதாக அமைந்துள்ளன. இந்த புதிய தெரிவுகள் அணிபவருக்கு சௌகரியத்தையும், கனகச்சிதத் தன்மையையும் வழங்குகிறது.
இந்த நத்தார் பண்டிகைக் காலத்தில் அணியும் ஒவ்வொரு ஆடையலங்காரத்திற்கும் கவர்ச்சியான, எடுப்பான தோற்றத்தை உருவாக்குவதே ட்ரையம்பின் முயற்சியாகும். சிலிக்கன் கம்பியால் வடிவமைக்கப்பட்ட இந்த பிரா தெரிவில் மிருதுவான மற்றும் வளைந்து கொடுக்கக்கூடிய தன்மை போன்ற புத்தம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், கீழே உலோக கம்பி பிடிக்கப்பட்ட பாரம்பரிய பிரா தெரிவுகளுக்கு ஒப்பான தாங்கிப்பிடிக்கும் தன்மையை வழங்குகிறது.
'அதியுயர் சௌகரியத்தை வழங்கும் Magic Wire பிரா தெரிவானது இந்த பண்டிகைக் காலப்பகுதிக்கேற்ற பொருத்தமான உள்ளாடை தெரிவாகும். பெண்களின் இயற்கையான அழகினை எடுப்பாக காட்டுவதுடன், கம்பியுள்ள பிராவின் ஆதரவுடன் கம்பியற்ற பிரா தெரிவின் சௌகரியத்தை வழங்குவதாக அமைந்துள்ளது' என இந்தியா மற்றும் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஷலிந்த்ர பெர்னான்டோ தெரிவித்தார்.
இந்த தெரிவுகள் பண்டிக்கை காலத்திற்கேற்ற வகையில் சிவப்பு மற்றும் புதிய வர்ணங்களில் காணப்படுகின்றன. இந்த அழகிய தெரிவுகள் மினுமினுப்பான மென்மையான துணியால் உருவாக்கப்பட்டுள்ளதுடன், 3D லேஸ் போன்ற அம்சங்களும் காணப்படுகின்றன. மேலும் இந்த தெரிவுகள் வகைகள் முன்புறம் அழகிய சிறிய போ வடிவத்துடன் கிடைக்கின்றன.
இந்த Magic Wire தெரிவுகளை மெஜஸ்டிக் சிட்டி, லிபர்ட்டி பிளாசா, Crescat, Alfred House Gardens, கண்டி சிட்டி சென்டர், மொறட்டுவ மற்றும் கப்புவத்தை K-Zones ஆகிய பிரதேசங்களிலுள்ள டிரையம்ப பிரத்தியேக காட்சியறைகளிலும், நாடுமுழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago