Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
விலையுயர்ந்த திருமண திட்டமிடல் சேவையின் திறன்களைக் கொண்ட ஒரு இலவச அப்ளிகேஷன்.
Magul.lk என்ற திருமணத்தை திட்டமிட்டு நடாத்துவதை இலகுவாக்கும் அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமணத்தை திட்டமிடுதல் மற்றும் திருமணத்துக்கான இடம், நிறத்தெரிவு, உணவுத் தெரிவு மற்றும் மேலும் பல திருமணம் சார்ந்த சேவைகளைப் பெறுக்கொள்வது இந்த அப்ளிகேஷன் மூலம் இலகுவாக்கப்படுகின்றது. இது வேலைப்பளுமிக்க இளம் தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஒரு ஜோடி தனியாக தமது திருமணத்தை தனியாக திட்டமிடும் போது (தொழில்முறை திருமண திட்டமிடுபவர்களின் சேவையை நாடாமல்) அதனால் ஏற்படும் வேலைப்பளுவால் மன உளைச்சலுக்கு உள்ளாகக்கூடும்.
திருமணம் என்பது ஒருவரின் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் என கூறப்படுகின்ற போதிலும், அதற்கு அதிக உழைப்பு தேவைப்படும். எனினும் Magul.lk அப்ளிகேஷனானது இந்த தொழில்நுட்பம் சூழ் உலகில் உங்களது திருமணத்தை உங்களுக்கு ஏற்ற வகையில் புதுமையானதாக திட்டமிட உதவுவதுடன், மணமகன் மற்றும் மணமகள் திருமண ஏற்பாடு தொடர்பான தேவையற்ற விரக்தியிலிருந்து விடுபட உதவுகின்றது.
Magul.lk நீண்ட வேலை நாட்கள் மற்றும் ஓய்வு நேரமில்லாத ஜோடிகள் தமது விசேட தினத்தை திட்டமிடுவதற்கான அப்ளிகேஷன் என்பதுடன் இது திருமணத்திற்கான இடம் மற்றும் விநியோகஸ்தர்களை தேடிக்கொள்வதை இலகுவாக்கின்றது.
தலைமுறை ‘Z’ பெரும்பாலும் ஸ்மார்ட்போனை சார்ந்ததாகும். எனவே இத்தகைய அப்ளிகேஷனை உள்ளங்கையில் வைத்திருப்பதானது, திருமணம் சார்ந்த வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் போன்ற சேவைகளை வழங்கக்கூடிய திருமண திட்டமிடும் சேவையை வழங்குபவருக்கு இணையானதாகும்.
திருமண வியாபாரத்தில் உள்ள விற்பனையாளர்களுக்கான தளமாக இந்த அப்ளிகேஷன் செயற்படுவதுடன், இது அப்ளிகேஷன் பயன்பாட்டாளர்களுக்கு விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்கள், தேவைக்கான அவர்களது பொருத்தம் தொடர்பான தகவல்களை வழங்கும் தரப்படுத்தல் முறையொன்றையும் கொண்டிருக்கும்.
மேலும் இந்த அப்ளிகேஷனானது விற்பனையாளர்கள் பரந்த வாடிக்கையாளர்களை சென்றடையவும் உதவுகின்றதென, , Modern Magul.lk (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரசிந்து லக்மால் தெரிவித்தார்.
திருமண பணிகளை முகாமைத்துவம் செய்தல்,திருமண ஜோடி சேவை வழங்குனர்களோடு தொடர்பைப் பேணுதல், தேடுதல் தொடர்பான தரவுகளை சேமித்து வைத்தல் மற்றும் திருமண அமைப்பாளராக செயற்படுதல் போன்ற சிறப்பம்சங்களை இந்த அப்ளிகேஷன் கொண்டிருக்கும். நடத்தைக் குறிப்புகள், அலங்கார போக்குகள் மற்றும் திருமண பாடல்கள் போன்றவற்றுடன் திருமணத்தைத் திட்டமிடுவதற்கான நிபுணர் ஆலோசனையுடன் பயனர்களை இணைப்பதற்கான வசதியை இந்த அப்ளிகேஷன் வழங்குகின்றது.
‘wedding inspiration’, பிரிவிலிருந்து வாடிக்கையாளர்கள் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும். பொதுவாக இணையத்தில் திருமணம் தொடர்பான ஆலோசனைகளை தேடுவதை விட இந்த அப்ளிகேஷன் மூலமாக திருமணம் தொடர்பான தேடலை ஒழுங்குமுறையில் மேற்கொள்ள முடியும்.
சந்தேகத்திற்கு இடமின்றி, Magul.lk என்பது மெய்நிகர் திருமண சந்தையாக இருப்பதுடன், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பலரின் திருமண கனவுகளை நனவாக்க இந்த துறையில் சேவை நிபுணர்களுடன் இணைக்கின்றது. இந்த சேவை மிக முக்கியமாக அதன் பாவனையாளர்களுக்கு இலவசமானது மற்றும் நம்பகமான மற்றும் தொந்தரவு இல்லாதது.
அனைத்து வாடிக்கையாளர் தகவல்களும் கடுமையான இரகசியத்தன்மையுடன் வைக்கப்பட்டுள்ளன, அவை இலங்கையின் தற்போதைய தரவு பாதுகாப்பு சட்டங்களுக்கு இணங்கி பாதுகாக்கப்படுகின்றன. மறுபுறம், சேவை வழங்குநர்கள் தாங்கள் தேடும் வாடிக்கையாளர்களை அடைய முடியும், இதனால் தங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கு தேவையற்ற விளம்பர செலவுகளைத் தவிப்பதுடன், ஒரு சேவை வழங்குநர் இந்த தளத்தின் மூலம் ஒரு பயன்மிக்க தகவல் தொடர்பு மூலோபாயத்தில் ஈடுபடமுடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago