Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 02 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தரமான மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வரும் Zone24x7 நிறுவனம், பிரிட்டிஷ் கணினி சமூகத்தின் இலங்கை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டின் தேசிய சிறந்த தர ICT விருதுகள் (NBQSA) வழங்கும் நிகழ்வில் வெற்றியாளராக தெரிவாகியிருந்தது.
அத்துடன், தனது AZIRO (Autonomous Inventory Robot) தீர்வுக்காக R & D பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. Zone24x7இனால் உருவாக்கப்பட்ட AZIRO, எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஆசிய பசுபிக் ICT விருதுகள் வழங்கும் நிகழ்வில் (APICTA) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R&D பிரிவில் இந்த ஆண்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே போட்டியாளராக Zone24x7 அமைந்துள்ளது.
R&D பிரிவில் 11 போட்டியாளர்களுக்கு எதிராக AZIRO போட்டியிட்டிருந்தது. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்நுட்ப கல்வியகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 70க்கும் அதிகமான போட்டியாளர்கள் இந்த விருதுகளுக்காக தம்மை பதிவு செய்திருந்தன. AZIRO என்பது மதிநுட்பமான navigation capable of performing RFID (radio-frequency identification) அடிப்படையிலான இருப்பு கணிப்பீடு மற்றும் சுழற்சி கணிப்பிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய surface robot platform ஆகும். RFID தொழில்நுட்பத்தின் மூலமாக இருப்பு கணிப்பீட்டை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், விநியோக தொடர் வினைத்திறனை மேம்படுத்துவதுடன், விற்பனையாளரின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
அமெரிக்காவின் பேடன்ட் உரிமையை Zone24x7 பெற்றுள்ளதுடன், மேலும் புலமைச்சொத்து தொடர்பான இரு பேடன்ட் உரிமையை AZIRO க்கு பெற்றுள்ளது.
கம்பனியின் வெளிப்படையான சாதனைகளை இந்த கௌரவிப்புகள் பிரதிபலிப்பதுடன், நாட்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டுக்கு அதிகளவு பங்களிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது என Zone24x7இன் பொது முகாமையாளரும் பொறியியல் பிரிவில் பதில் தலைவருமான கலாநிதி. சன்கல்ப கம்வரிகே தெரிவித்தார். 'பல நிறுவனங்கள் மத்தியில் நாம் கௌரவிக்கப்பட்டமை தொடர்பில் பெருமையடைகிறோம். இதன் மூலம் எமது புத்தாக்கமான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் போட்டியிடும் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.
Zone24x7இன் வன்பொருள் மற்றும் மென்பொருள் அடிப்படையிலான தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் திறன் என்பதன் மூலமாக புதிய அனுபவங்கள் மேம்படுத்தப்படுகின்றன. Stanford Research Institute (SRI) போன்ற முன்னணி R&D நிறுவனங்களுடனான பங்காண்மைகள் மூலமாக வளர்ந்து வரும் Fortunue 1000 வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் நிறைந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணக்கூடியதாக அமைந்திருக்கும். இலங்கையின் பொறியியல் பன்முக திறமைகளின் வெளிப்பாடாக AZIRO அமைந்துள்ளது.
கலிபோர்னியாவின் San Jose நகரிலுள்ள Sillicon Valley தலைமையகமாக கொண்டுள்ளதுடன், இலங்கையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் Zone24x7, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகள் படைத்த இலத்திரனியல் கட்;டமைப்புகள் ஆய்வுகூடத்தையும் நிறுவியுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்காவிலும், இலங்கையிலும் நிலையங்களை கொண்டுள்ளதுடன், 180 க்கும் அதிகமான பொறியியலாளர்களைக் கொண்டு சர்வதேச ரீதியில் புத்தாக்கமான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி வருகிறது. Zone24x7 இன் பிரதான சந்தைகளாக வட அமெரிக்கா (ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா) அமைந்துள்ளதுடன், அண்மையில் தனது வாடிக்கையாளர் வலையமைப்பை பிரித்தானியா மற்றும் நோர்வேக்கும் விஸ்தரித்திருந்தது.
2003இல் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி லாவன் பெர்னான்டோவினால் ஸ்தாபிக்கப்பட்டது முதல், கம்பனி இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருகிறது. இதில் உயர் தொழில்நுட்பம், அரசாங்கம் மற்றும் இலாபமற்ற பிரிவுகள், விற்பனை, சரக்கு போக்குவரத்து போன்ற பல துறைகள் இதில் உள்ளடங்கியுள்ளன. எட்டு சிறப்பு நிலையங்களை கொண்டு, வன்பொருள் முதல் மென்பொருள் வடிவமைப்பு போன்ற பரிபூரண தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கி வருகிறது.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago