2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

Prime Group’இன் ‘88 Residence Kahathuduwa’ திறந்த நாள் நிகழ்வுv

Freelancer   / 2024 ஒக்டோபர் 01 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைவருக்கும் தமது கனவு இல்லத்தை, நனவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் தம்மை அர்ப்பணித்துள்ள Prime Group, கஹாதுடுவ பிரதேசத்தில் தனது புதிய சொகுசு வதிவிட நிர்மாணத்திட்டமான 88 Residence இன் திறந்த நாள் நிகழ்வை முன்னெடுத்திருந்தது.

மாதிரி இல்லத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு, இல்லக் கனவை கொண்டிருப்பவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. Prime Group இன் ஒவ்வொரு நிர்மாணத்திட்டத்திலும் காணப்படும் நுணுக்கமான சிறப்பம்சங்களை நேரடியாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

உடன்படிக்கையின் கீழ், வீட்டு உரிமையாளர்களால் மொத்தப் பெறுமதியின் 25% ஐ மட்டும் முன்கூட்டியே செலுத்தி 88 Residence இல் இல்லமொன்றின் உரிமையாளராகலாம். இந்தத் தொகை சுமார் ரூ. 8 மில்லியன் மாத்திரமாகும். வாடிக்கையாளர்களுக்கு இல்லத்தில் குடியேறுவதற்கான வாய்ப்பு உடனடியாக வழங்கப்படுவதுடன், சட்டபூர்வ ஆவணங்கள் தயார்ப்படுத்தப்பட்டு, மாற்றம் செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து, முதல் வருடத்துக்கான வட்டிச் செலவை Prime Group பொறுப்பேற்று, சிக்கல்களில்லாத மாற்றத்தை உறுதி செய்யும். திறந்த நாள் நிகழ்வில் HNB இன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன், கொடுப்பனவுத் திட்டம் பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தனர்.

Prime Lands (Pvt) Ltd இன் விற்பனைச் செயற்பாடுகளுக்கான சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் சுரங்க பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த திறந்த தினத்தை ஏற்பாடு செய்திருந்தமைக்கான நோக்கம், கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பவர்களுக்கு, Prime Group இன் தாய் நிறுவனமான Prime Lands Pvt (Ltd) மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் நிதி வசதியை பெற்றுக் கொள்வதை இலகுவாக்கிக் கொடுப்பதாக அமைந்திருந்தது. குறிப்பாக, இந்த கொடுப்பனவு தெரிவினூடாக, வீட்டு உரிமையாளர்களுக்கு 88 Residence இல் வீட்டு உரிமையாண்மையை பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், குழுமத்தின் தனித்தனி வீட்டுத் திட்டங்களுக்கும் பொருத்தமானதாக அமைந்திருக்கும். புரட்சிகரமான கொடுப்பனவு திட்டத்துடன், வீட்டு உரிமையாண்மையை பெற்றுக் கொள்வதற்கு அதிகளவு வாய்ப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், முன்னரை விட நடைமுறைச் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

பிலியந்தலையின் கஹாதுடுவ பகுதியில் பச்சைப் பசேலென அமைந்த வயல்வெளியை அண்மித்து இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இயற்கை அம்சங்களுடன் ஒன்றித்த வாழ்க்கையை முன்னெடுக்க உதவும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இல்லத்திலும் நவீன வசதிகள் அடங்கியுள்ளது. 88 Residence இல் 25 இல்லங்கள் காணப்படுவதுடன், 24 மணி நேர பாதுகாப்பு, 1,365 முதல் 1,572 சதுர அடி வரையான மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட மூன்று வெவ்வேறு இல்லங்கள் காணப்படுகின்றன.

HNB இன் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரி காஞ்சன கருணாகம கருத்துத் தெரிவிக்கையில், “வீட்டுஉரிமையாளராவதற்கான இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுவூட்ட HNB ஐச் சேர்ந்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். Prime Group உடன் எமது பங்காண்மையினூடாக, வீடுகளை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்போருக்கு பொருத்தமான கொடுப்பனவு திட்டங்கள் வழங்கப்படுவதுடன், சொகுசான இல்லமொன்றை முன்னரை விட இலகுவாக பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்படுகின்றது. பெருமைக்குரிய 88 Residence இல் ஏதேனும் நிதிசார் தடைகளை நாம் இல்லாமல் செய்து, கனவு இல்லத்துக்கான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.” என்றார்.

முறையாக கட்டமைக்கப்பட்ட இல்லங்களில், மின் விளக்குகள், மின் விசிறிகள் போன்றவற்றுடன் கிரனைட் பதிக்கப்பட்ட சமையலறை பண்டசாலை போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 120 பேருந்து வழித்தடத்திலிருந்து 750 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுடன், கொட்டாவ பகுதியிலிருந்து 10 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது. 88 Residence இனால் தென் பிராந்தியத்தின் பிரதான நகரங்களை இலகுவாக அணுகுவதற்கு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன.

88 Residence கஹாதுடுவவில் புதிய வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுப்பதற்கு வருமாறு Prime Group அழைத்துள்ளதுடன், நவீன சொகுசு இல்லத்தின் அனுபவத்தை பெற்றுக் கொள்ளுமாறும் அழைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .