2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

Prime Group காலி கிளையை இடம்மாற்றியுள்ளது

Freelancer   / 2024 ஜூலை 08 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

Prime Group தனது காலி கிளையை, இல. 66, ஹவ்லொக் வீதி, காலி எனும் முகவரிக்கு இடம் மாற்றியுள்ளது. அதனூடாக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் கிளையை கொண்டுள்ளதுடன், தொழினுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட இடவசதியையும் கொண்டுள்ளது. Prime Groupஇன் பயணத்தில் இந்த நகர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சௌகரியம், நவீன உட்கட்டமைப்பு மற்றும் சிறந்த சேவையை பெற்றுக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.

புதிய கிளையின் உட்கட்டமைப்பு மற்றும் செயன்முறைகள் போன்றன மேம்படுத்தப்பட்டு, உயர் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒப்பற்ற அணுகல் திறன் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதாக அமைந்திருப்பதுடன், Prime Groupஇன் பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்திய அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. உள்ளக நிபுணத்துவத்தைக் கொண்டு, Prime Group இனால் பல முக்கியத்துவம் வாய்ந்த மேம்படுத்தல்கள் புதிய பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் கொடுப்பனவு மற்றும் கொள்முதல் மாதிரிகளில் கவனம் செலுத்தப்படும் automated ERP கட்டமைப்பின் ஒன்றிணைப்பு மற்றும் மீளசெயற்படுத்தல் செயன்முறை போன்றன அடங்கியுள்ளன. இந்த மேம்படுத்தல்களினூடாக ஒழுங்கமைக்கப்பட்ட பணிச்செயற்பாடுகள், தரவுகள் அடிப்படையிலான கண்காணிப்பு, பாரம்பரிய கடதாசி பதிவுகளில் தங்கியிருக்கும் தன்மையில் வீழ்ச்சி மற்றும் வலிமைப்படுத்தப்பட்ட செயற்பாட்டு மேற்பார்வை போன்றன உறுதி செய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது கோரிக்கைகளுக்கு வினைத்திறனான பதில்களையும், ஒப்பற்ற அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Prime Group இன் தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “தொழிற்துறையின் முன்னோடிகள் எனும் வகையில், பெறுமதி வாய்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தெரிவுக்கமைவான ரியல் எஸ்டேட் மற்றும் வதிவிட தீர்வுகளை வழங்குகின்றோம். காலி நகரின் மையப் பகுதியில் புதிய இடத்தில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். Prime Group இன் காலி கிளையின் மூலோபாய இடம்மாற்றம் என்பதனூடாக, விரிவாக்கத்துக்கான எமது அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், எமது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காணப்பிக்கும் உறுதித்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. தூரநோக்குடைய தலைமைத்துவத்தை வழங்குகின்றமைக்காக, குழும தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எமது நிறுவனத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒப்பற்ற அர்ப்பணிப்புக்காக எமது பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சௌகரியம் மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த புதிய இடம் உறுதி செய்கின்றது. தொழிற்துறையின் முன்னோடிகளாக எம்மை வேறுபடுத்திக் காண்பிக்கின்றது.” என்றார்.

தென் கரையோரப் பகுதியில் பல்வேறு புதிய செயற்திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக Prime Group அறிவித்துள்ளது. அதில், வெலிகம நகரில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டமும் அடங்கியுள்ளது. மேலும், தென் பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், மாத்தறை உதார மாவத்தையில் புதிய திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. அதிகளவு குடியிருப்புகளை கொண்ட இந்தப் பகுதி காலி மாத்தறை பிரதான வீதியிலிருந்து 350 மீற்றர் தூரத்திலும், மாத்தறை நகரிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த காணியை அண்மித்து சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் அமைந்துள்ளன. அழகிய ஹிக்கடுவ கரையோரத்துக்கு முகப்பாக, Prime Group இனால் மற்றுமொரு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் பின்னதுவ பகுதியிலும் வதிவிடத் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

தற்போது, இலங்கையின் நம்பிக்கையை வென்ற ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளர் எனும் நிலையை எய்தியுள்ள Prime Group, வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதுடன், அதிகளவு சர்வதேச சந்தைகளை சென்றடையவும், புதிய வியாபார வழிமுறைகளை தெரிவு செய்யவும் எதிர்பார்த்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X