2024 மே 18, சனிக்கிழமை

Rainbow Pages சம்பியன்ஸ் லீக்

Freelancer   / 2024 மே 10 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டாண்மை நிறுவனங்களுக்கான அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் போட்டித் தொடர் அண்மையில் பத்தரமுல்ல ஜி எச் புத்ததாச மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நாட்டின் முன்னணி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 28 அணிகள் பங்கேற்றிருந்தன. இந்த போட்டித் தொடரை Rainbow Pages நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. SLT-MOBITEL குழுமத்தினால் இலங்கையின் தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவையான Rainbow Pages நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியின் வெற்றியாளர்களாக Winners Global, Sonasu Connect, GM Garments மற்றும் Salota International ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தன. சம்பியன்ஷிப் பட்டத்தை Winners Global பெற்றுக் கொண்டதுடன், GM Garments மற்றும் Salota International ஆகியன இணைந்த இரண்டாமிடங்களுக்காக அறிவிக்கப்பட்டிருந்தன.

Winners Global (Pvt) Ltd இன் கிரிக்கட் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்ததுடன், ரூ. 200,000 பணப் பரிசையும் பெற்றுக் கொண்டது. வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை பரிசளிக்கும் நிகழ்வில், பொரளை The Chance Sports இன் முகாமைத்துவ பணிப்பாளர் லசந்த அமரசிங்க, நுகேகொட AD Sports இன் முகாமைத்துவ பணிப்பாளர்களான ஆனந்த மற்றும் திருமதி. வசந்தி, SLT (Services) Limited இன் பிரதம அதிகாரி (டிஜிட்டல் சேவைகள்) உபுல் மஞ்சநாயக்க மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி அசேல கலப்பத்திகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .