2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

SDBக்கு ISO 27001:2013 தரச்சான்றிதழ்

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சணச அபிவிருத்தி வங்கியானது, சர்வதேச தர நிர்ணயத்துக்கான சான்றிதழைப் (ISO 27001:2013) பெற்றுக்கொண்ட அதேவேளை, தகவல் பாதுகாப்புக்கான நவீன ISO தரமான ISO27001:2013 ஐப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் இரண்டாவது வங்கியாகவும் திகழ்கின்றது. சான்று என்பது, வங்கியானது நவீன சிறந்த நடைமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் தொழிற்றுறை தரங்களுடனான தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமையை (ISMS) குறிக்கின்றது.

இச்சான்றானது, SDBக்கு உலகளாவிய ரீதியில் சான்று வழங்கலுக்கான மிகச்சிறந்த உறுப்புக்களுள் ஒன்றான வெரிடாஸ் பணியகத்தினால் வழங்கப்பட்டதாகும்.

அதேவேளை, போதியளவு தகவல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்துவதும், சாத்தியப்பாடுடைய முறைமை இடையூறுகளை தவிர்ப்பதற்கும், எதிர்கொள்வதற்குமான ஏனைய வடிவிலான இடர்களை முகம்கொடுக்கக்கூடிய இயலுமையை உறுதிப்படுத்துவதுமாகும். அத்தோடு, தகவல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளானவை தொடர்ந்து செல்லும் அடிப்படையில் பாதுகாப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பதையும் இச்சான்றானது உறுதிகூறுகின்றது.

தகவல் பாதுகாப்பு, தனியாள் உரிமை மற்றும் தகவல் தொழில்நுட்ப ரீதியிலான மேற்பார்வை என்பவை தொடர்பில் உள்நாட்டு,  வெளிநாட்டு வங்கிகளுடன் போட்டியிடுவதற்கான வங்கியின் முயற்சிகளை இச்சான்றுப்படுத்தலானது உறுதிப்படுத்தியுள்ளது

ISO சான்றுப்படுத்தலானது, எமது வாடிக்கையாளர்களின் தகவல் சொத்து தொடர்பில் உயர் பாதுகாப்பையும் கவனத்தையும் வழங்குவதோடு, தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் புத்தாக்கமுடைய உற்பத்திகளை வழங்குவதற்குமான வங்கியின் தயார் நிலையையும் காட்டுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X