Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 08, சனிக்கிழமை
Janu / 2024 ஜூன் 05 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிறைவடைந்த முதல் காலாண்டு பகுதியில் SLT-MOBITEL சவால்களுக்கு மத்தியிலும் எல்லையளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. எவ்வாறாயினும், நிறுவனத்தின் தூரநோக்குடைய செலவு நிர்வாக செயற்பாடுகளின் காரணமாக, பெருமளவு தொழிற்பாட்டு செலவீன சேமிப்புகளை பெற்றுக் கொள்ள முடிந்ததுடன், இலாபகரத்தன்மையை பேண முடிந்திருந்தது.
நிறைவடைந்த முதல் காலாண்டில், SLT குழுமம் மொத்த வருமானமாக ரூ. 26.93 பில்லியனை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.4% வளர்ச்சியாகும்.
எவ்வாறாயினும், முன்னைய நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், வருமானத்தில் 3.7% அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது. இதில் நிறுவனசார் மற்றும் புரோட்பான்ட் பிரிவுகளின் வருமான அதிகரிப்பு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன.
நிறுவனம் செலவுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தொழிற்படு செலவீனத்தில் 0.6% சரிவை ஏற்படுத்தியிருந்தது (தேய்மானம் மற்றும் பெறுமதி இறக்கம் தவிர்ந்த). வருடாந்த பராமரிப்பு செலவு (AMC), சர்வதேச கொடுப்பனவுகள் மற்றும் இணைய பின்புல கட்டணங்கள் போன்றன ரூபாய் மதிப்புயர்வு காரணமாக டொலர் சார்ந்த செலவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி இதில் முக்கிய பங்காற்றியிருந்தது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், தளம்பல்களுடனான வியாபார சூழல் காணப்பட்டதுடன், பெரும் பொருளாதார காரணிகளினால் நிறுவனத்தின் வருமானத்தில் தாக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், SLT-MOBITEL துரிதமாக செலவு செம்மையாக்கல் மூலோபாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்ததுடன், அதனூடாக நிறுவனத்துக்கு தொழிற்படு செலவை குழும மட்டத்தில் 2.7% வரை சேமித்துக் கொள்ள முடிந்தது.
SLT-MOBITEL இன் செலவு சேமிப்பு முயற்சிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதில், குறிப்பாக வருடாந்த பராமரிப்பு செலவுகள், வாகன வாடகை கட்டணங்கள், சர்வதேச செலுத்துகைக் கட்டணங்கள் மற்றும் பழுதுபார்ப்பு, பராமரிப்பு செலவுகள் போன்றன அடங்கியிருந்தன. இந்த ஏற்பாடுகளினூடாக, வருடாந்த அடிப்படையில் EBITDA அதிகரிப்பான 10.3% பெற்றுக் கொள்ள ஏதுவாக இருந்ததுடன், நிறுவனத்தின் தொழிற்பாட்டு வினைத்திறனை வெளிப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
EBITDA அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், பெருமளவு முதலீட்டு நடவடிக்கை காரணமாக அதிகரித்த மூலதன செலவுகளினால் குழுமத்தின் தொழிற்படு இலாபம் 1.9% குறைவடைந்திருந்தது. குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபமும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில் குறைந்த தொழிற்பாட்டு இலாபம் மற்றும் குறைவடைந்து செல்லும் வட்டி வீதங்கள் காரணமாக, குறைந்த வட்டி வருமானம் போன்றன பங்களிப்புச் செய்திருந்தன.
எவ்வாறாயினும், முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், வரிக்கு பிந்திய இலாப அதிகரிப்பை SLT-MOBITEL பதிவு செய்திருந்தது. முன்னேற்றகரமான EBITDA மற்றும் தொழிற்படு இலாபம் ஆகியன இதில் பங்களிப்புச் செய்திருந்ததுடன், அந்நியச் செலாவணி வருமதிகள் மற்றும் குறைந்த வட்டி செலவுகள் போன்றன இதில் உள்ளடங்கியிருந்தன.
மேலும் முடிவடைந்த காலாண்டில், SLT-MOBITEL இனால் அரசாங்கத்துக்கு வரி, தீர்வைகள் மற்றும் பங்கிலாபங்கள் போன்றவற்றினால் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இதனூடாக, தேசத்தின் பொருளாதார அபிவிருத்தியில் அதன் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
நீண்ட கால அடிப்படையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு காணப்படும் வாய்ப்புகள் மற்றும் வியாபார செயற்பாடுகள் தொடர்பில் SLT-MOBITEL நம்பிக்கை கொண்டுள்ளதுடன், SEA-ME-WE 6 (South East Asia-Middle East -Western Europe) கடல் கீழ் கேபிள் கட்டமைப்பில் பெருமளவு முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. SEA-ME-WE 6 கேபிள் கட்டமைப்பினூடாக, SLT-MOBITEL க்கு அதிகளவு சர்வதேச பான்ட்வித் கொள்ளளவை பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதுடன், மேம்படுத்தப்பட்ட இணைப்புத்திறனையும் வழங்கி, தொலைத் தொடர்பாடல் துறையில் நிறுவனத்தின் நிலையை மேலும் உறுதி செய்யும்.
அதிகரித்துச் செல்லும் வியாபார கட்டமைப்பை கொண்டு இயங்கும் SLT-MOBITEL, தொழிற்பாட்டு சிறப்பு, மூலோபாய முதலீடுகள் மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதில் அதிகளவு கவனம் செலுத்தி, வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்கின்றது. மேலும் அதிகரித்துச் செல்லும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதிலும், சகல பங்காளர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
58 minute ago
6 hours ago
08 Feb 2025