Freelancer / 2025 ஜூன் 30 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL மற்றும் ஓய்வூதியத் திணைக்களம் ஆகியன நீண்ட காலமாக பேணி வரும் மூலோபாய பங்காண்மையை மேலும் நீடித்துள்ளன. இலங்கையின் அரச துறையைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் இந்த பங்காண்மை அமைந்துள்ளது. ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக கட்டியெழுப்பப்பட்ட இந்த பங்காண்மையின் வெற்றிகரமான செயற்பாடு இந்த நீடிப்பினூடாக மீள உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பங்காண்மையினூடாக, அரச துறை ஓய்வூதியம் பெறுவோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட விசேட தவணை அடிப்படையிலான சாதனங்கள் கொள்வனவு திட்டத்தை SLT-MOBITEL தொடர்ந்தும் வழங்கும். ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆரம்பத்தில் பெருமளவு தொகையை முதலீடு செய்யாமல், ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் இதர டிஜிட்டல் சாதனங்களை போட்டிகரமான சந்தை விலையில் கொள்வனவு செய்வதற்கு இந்தத் திட்டத்தினூடாக வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் விசேடமான உள்ளங்கமாக, சௌகரியமான கொடுப்பனவு கட்டமைப்பு அமைந்துள்ளது. இதனூடாக, மாதாந்த கட்டுப்பணங்கள், ஓய்வூதியம் பெறுவோரின் மாதாந்த கொடுப்பனவுகளிலிருந்து சுயமாக அறவிடப்படுவதுடன், ஒப்பற்ற மற்றும் அழுத்தமில்லாத அனுபவத்தை வழங்குகிறது.
SLT-MOBITEL தொடர்ச்சியாக தனது சாதனங்கள் வழங்கலை மேம்படுத்திய வண்ணமுள்ளதுடன், நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் புரோட்பான்ட் தீர்வுகள் போன்றவற்றை ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கி, நவீன தொழினுட்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கு, SLT-MOBITEL இன் புகழ்பெற்ற உபஹார பக்கேஜ் ஊடாக, ஸ்மார்ட்ஃபோன்களை கொள்வனவு செய்ய முடியும். ஓய்வு பெற்றாலும், பெறுமதி வாய்ந்த பொதுச் சேவையாளர்களின் டிஜிட்டல் இடைவெளியை இல்லாமல் செய்வதில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இணைப்பில் இருப்பதற்கு உதவுவதுடன், தகவல் அறிவதற்கும், முக்கியமான சேவைகளை ஒன்லைன் ஊடாக பெற்றுக் கொள்வதற்கும், இன்றைய டிஜிட்டல் சமூகத்தில் பங்கேற்கச் செய்வதற்கும், நவீன உலகை எதிர்கொள்ள வலுவூட்டுவதாகவும் அமைந்துள்ளது.
சாதன ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக, இந்தப் பங்காண்மையினூடாக, ஓய்வூதியம் பெறுவோருக்கு, விசேட நிகழ்வுகள் மற்றும் சுகாதார முகாம்களினூடாகவும் ஆதரவளிக்கப்பட்டு, இலங்கையின் ஒட்டுமொத்த ஓய்வூதியம் பெறும் பொதுத் துறை ஊழியர்களின் நலனில் தனது அர்ப்பணிப்பை SLT-MOBITEL வெளிப்படுத்துகிறது. அத்துடன், இலங்கையின் ஓய்வூதியம் பெறும் பொதுத் துறை சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கையும் வகிக்கிறது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026