2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

TVS லங்கா ஓட்டப்பந்தயக்குழு Fox Hill 2016 ஐ வெற்றி கொண்டது

Gavitha   / 2016 ஜூன் 15 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

24ஆவது Fox Hill Super Cross 2016இல் இலங்கையின் முன்னணி புத்தாக்க மைக்ரோ  automobile வர்த்தக நாமமான TVS அதன் ஓட்டப்பந்தயத் திறமையை வெளிப்படுத்தியிருந்தது. Sri Lanka Military Academy மற்றும் Sri Lanka Auto Sports Drivers Association ஆல் ஒழுங்குசெய்யப்படும் Fox Hill இலங்கையின் முன்னணி ஓட்டப்பந்தய நிகழ்வாக திகழ்கின்றது. முக்கிய சம்பியன் போட்டிகளான 10 laps உடனான 125cc வரையிலான 2T மற்றும் 4வT,  Group MX - Motocross Bikes போட்டியின் முதல் ஓட்டம் மற்றும் இரண்டாவது ஓட்டம் ஆகியன முறையே ஜேக்ஸ் குணவர்த்தன மற்றும் இஷான் தசநாயக்கவால் வெற்றி கொள்ளப்பட்டதன் மூலம் TVS ஓட்டப்பந்தயக்குழு Fox Hill சம்பியன் போட்டியின் 250cc பிரிவுப்பட்டத்தை சுவீகரித்தது. அதன் விசேட 2km தடம் ஓட்டப்பந்தயத்துறையின் சிறந்த திறமைகளை ஈர்ப்பதுடன் இவ்வருடம் மொத்தமாக நடைபெற்ற 24 நிகழ்வுகளில் 149 மோட்டார் செலுத்துனர்களும் 190 ஓட்டுனர்களும் பங்குபற்றினர். இவ்வருட பந்தயத்தை பார்வையிட 25,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றி பற்றி கருத்துத் தெரிவித்த TVS லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரவி லியனகே, 'இது TVS வர்த்தக நாமத்தின் உண்மையான திறமையை பிரதிபலிக்கின்றது. அதன் வர்த்தக நாமங்களில் உள்வாங்கப்பட்டிருக்கும் திறன்சார் வெளிப்பாடு TVSஇன் தயாரிப்புக்களிலும் பிரதிபலிக்கின்றது. இளைய, துடிப்பான குழுவிடமிருந்து இவ்வாறான அதிசிறந்த திறமையை கண்டதை எண்ணி பெருமையடைகிறோம். TVSஇன் தயாரிப்புக்களில் pick up மற்றும் வேகம் ஆகியன முக்கிய இரு மதிப்புமிகு திறமையை வெளிக்காட்டும் அடிப்படையாக இளையோர்களால் அதிகம் பாராட்டப்படுகிறது.' என்றார்.

TVS லங்காவின்; துணை பொது முகாமையாளர் கீதால் அன்டனி குறிப்பிடுகையில், 'Fox Hill இல் எமக்குக் கிடைத்தது தெளிவான வெற்றி. TVS குழு எதிர்காலத்தில் ஏனைய போட்டிகளிலும் வெற்றி பெறும் என நம்புகின்றோம். இது சந்தைத் தலைமைத்துவம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை குறிக்கும் மைல்கல் பயணம் ஆகும். TVS ஓட்டப்பந்தயக்குழுவால் வெளிக்காட்டப்பட்ட தொழில் நிபுணத்துவம் மிகவும் பாராட்டத்தக்கது.' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X