2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Unger தயாரிப்புகள் அறிமுகம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்துறைசார் திறன் தூய்மையாக்கல் தீர்வுகள் வழங்குநரான Spotless  சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற தூய்மையாக்கல் வர்த்தக நாமமான Unger ஐ  தனது தெரிவுகளில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் புதிய வர்த்தக நாமத் தெரிவுகள், உயர் தரம் வாய்ந்த, புத்தாக்கமான தூய்மையாக்கல் தயாரிப்புகளாகவும் அமைந்துள்ளதுடன், இவை உத்தியோகபூர்வமாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஹோட்டல் ஷோ கண்காட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.இலங்கையில் Unger ஐ தயாரிப்புகளின் ஏக விநியோகஸ்த்தராக Spotless திகழ்கிறது.

பல்வேறு வகையான தூய்மையாக்கல் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. Unger உலகளாவிய ரீதியில் உயர்தரமான தயாரிப்புகளை வழங்கி அதன் மூலம் பணியாளர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்காக புகழ்பெற்றுத் திகழ்கிறது.

1964 ஆம் ஆண்டு, ஜேர்மனியில் ஸ்தாபிக்கப்பட்ட Unger சந்தையின் தேவை எது என்பதை நன்கு புரிந்துக் கொண்டவர் ஒருவரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. உயர் தரம், புத்தாக்கம், பொருட்களை தூய்மையாக்கல் மற்றும் உயர்தர வாடிக்கையாளர் சேவைகளை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றுக்காக Unger  புகழ்பெற்றுத் திகழ்கிறது.

ஜன்னல்களைதூய்மையாக்குவதில் நிபுணரான ஹென்ரி உங்கர் என்பவர், சந்தையில் போதியளவு மதிநுட்பமான  தூய்மையாக்கல் தயாரிப்புகள் இல்லை என்பதை இனங்கண்டிருந்தார்.எனவே தனது சொந்த தயாரிப்பை இவர் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்.

நிபுணத்துவமான   தூய்மையாக்கல் துறையில் இந்நிறுவனம் துரித வளர்ச்சி கண்டு, சந்தையின் முன்னோடியாகத் தெரிவாகியிருந்தது. இன்றையக் காலகட்டத்தில், Unger என்பது சர்வதேச வர்த்தக நாமமாக திகழ்வதுடன், ஜக்கிய அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. ஜேர்மனியில் நவீன வசதிகள் படைத்த உற்பத்தி பகுதியை நிறுவனம் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வியாபார பங்காளர்களைக் கொண்டுள்ளது.

ஜன்னல்கள், உள்ளக தூய்மையாக்கல்கள் மற்றும் சூரிய படல் தூய்மையாக்கல் போன்றன முதல் வெளியக மற்றும் குப்பைகளை அகற்றும் சாதனங்கள் மற்றும் தூய நீர் சுத்தமாக்கல் கட்டமைப்புகள் போன்ற பல்வேறு தேவைகளை Unger தயாரிப்புகள் நிவர்த்தி செய்கின்றன. இந்த தயாரிப்புகள் இலகுவாக, வினைத்திறன் வாய்ந்த வகையில் மற்றும் தங்கியிருக்கக்கூடிய வகையில் செயற்படக்கூடியனவாக அமைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X