2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

UnionPay International உடன் சம்பத்தின் ATM வலையமைப்பு இணைப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பத் வங்கி, UnionPay  இன்டர்நஷனல் உடன் பங்காண்மை உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. உலகின் மாபெரும் கார்ட் வலையமைப்புகளில் ஒன்றாக திகழும் UnionPay உடனான இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு சம்பத் வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் UnionPay இன்டர்நெஷனலின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையே கொழும்பு 2 இல் அமைந்துள்ள ஹில்டன் கொழும்பு ரெஸிடன்ஸில் இடம்பெற்றது.

UnionPay இன்டர்நெஷனல் உடனான இந்த பங்காண்மை மூலமாக, UnionPay கார்ட் வைத்திருப்போருக்கு, நாடு முழுவதும் காணப்படும் 350க்கும் அதிகமான சம்பத் வங்கி ATM வலையமைப்பின் ஊடாக பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பங்காண்மை தொடர்பில் சம்பத் வங்கியின் வணிக அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளுக்கான பதில் பொது முகாமையாளர் தாரக ரன்வல கருத்துத் தெரிவிக்கையில், 'சம்பத் வங்கி மற்றும் UnionPay இடையிலான பங்காண்மையின் மூலமாக, UnionPay கார்ட்களை வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளின் பயண அனுபவத்துக்கு பெறுமதி சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேசத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் நபர்களுக்கு மீள வழங்குவது எனும் எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்த ஒன்றிணைவின் மூலமாக எமது பொருட்கள் தெரிவு நீடிக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு வசதி மற்றும் பிரத்தியேகமான அனுகூலங்களை வழங்குவது தொடர்பான எமது ஆர்வத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சம்பத் வங்கியைச் சேர்ந்த நாம், இந்த பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம்' என்றார்.

5 பில்லியனுக்கும் அதிகமான UnionPay கார்ட்கள் சீனாவிலும், வெளிநாடுகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த வலையமைப்பு சீனாவின் சகல நகரங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் UnionPay கார்ட் ஏற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக உலகளாவிய ரீதியில் 300க்கும் அதிகமான நிறுவனங்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது UnionPay கார்ட்கள் 26 மில்லியன் விற்பனை நிலையங்கள் மூலமாகவும் 18 மில்லியன் ATM மூலமாகவும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் UnionPay கார்ட் அனுமதி வலையமைப்பை ஏற்படுத்துவது மற்றும் வங்கிகளுக்கிடையில் கொடுக்கல் வாங்கல் மற்றும் கொடுப்பனவு தீர்வு கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக சீனா UnionPay புகழ் பெற்றுத் திகழ்கிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X