Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
Idea Group of Companies தனது மற்றுமொரு புதிய புத்தாக்கமான தயாரிப்பான ‘Veera’ ஐ அறிமுகம் செய்துள்ளது.
கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘Construction - 2018’ வர்த்தக கண்காட்சியின் போது ‘Veera’ தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
‘முற்றிலும் பாதுகாப்பானது’ எனும் தொனிப்பொருளைக் கொண்ட ‘Veera’ தயாரிப்பு, நூறு சதவீதம் இலங்கையின் தயாரிப்பு என்பதுடன், நாட்டில் நிலவும் பரந்துபட்ட காலநிலைகளுக்கு பொருத்தமான வகையில் அமைந்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நீடித்த பாவனைக்கான உத்தரவாதத்தை கொண்டுள்ளது. ‘Veera’ தயாரிப்பின் வெளி லேயர், ASA (Acrylonitrile Styrene Acrylate) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக, கடுமையான சூரிய ஒளியின் போதும் வீட்டின் உட்பகுதியில் குளிர்மையை பேணக்கூடியதாக இருக்கும். ‘Veera’ கூரைத்தகடுகளும், அஸ்பெஸ்டஸ் தகடுகளை போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. புற்றுநோயை தோற்றுவிக்கக்கூடிய எவ்விதமான பதார்த்தங்களையும் கொண்டிருப்பதில்லை என்பதுடன், ஈயத்தை கொண்டிருக்காததால், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தமது இல்லங்களில் ‘Veera’ தயாரிப்பை பயன்படுத்த முடியும்.
பாவனையாளர்களின் தேவைகளின் பிரகாரம் ‘Veera’ தயாரிப்புகளை செங்கல் சிவப்பு, கடும் பழுப்பு மற்றும் கடும் பச்சை ஆகிய வர்ணங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஆறு, எட்டு, பத்து மற்றும் பன்னிரண்டு அடி எனும் வெவ்வேறு நீளங்களில் ‘Veera’ காணப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு அவசியமான எந்த அளவிலும் தயாரித்துக் கொள்ள முடியும்.
2.8 மில்லிமீற்றர் தடிப்பைக் கொண்ட ‘Veera’ தயாரிப்பு, 980 மில்லிமீற்றர் அகலமானது. மூன்று லேயர்களை கொண்டது எடை ஒரு சதுர அடிக்கு 400 கிராம்களாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
5 hours ago