Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குள் மிகவும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைப்பதற்கு, வேள்ட் விஷன் அமைப்புடன் HSBC கைகோர்த்துள்ளது.
வேள்ட் விஷனின் புதிய நிதிச்சேகரிப்பு முன்னெடுப்பான 'நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் இருமடங்காக்கப்படும்' என்பதன் ஓர் அங்கமாக இது முன்னெடுக்கப்படுகிறது. இம்முன்னெடுப்புகளின் போது, வேள்ட் விஷனுக்கு அன்பளிக்கப்படும் தொகைக்குச் சமமான தொகையை அவ்வமைப்பு அன்பளிக்கும். எச்.எஸ்.பி.சி - வேள்ட் விஷன் ஆகியவற்றுக்கிடையிலான இந்த இணைப்பின் மூலமாக கிளிநொச்சி, சாவகச்சேரி, சங்கானை, நெடுந்தீவு, நுவரெலியா, பொலன்னறுவை, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2,586 குடும்பங்கள், இரண்டு வாரங்களுக்கான உலருணவுப் பொதிகளைப் பெறும்.
தற்போதுள்ள மிகப்பெரியதும் மிக அவசரமானதுமான மனிதாபிமானத் தேவைகளுள் ஒன்றாக, கிராமப்பகுதி மக்களுக்கான அடிப்படை உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொடுத்தல் காணப்படுகிறது. நாட்டில் போதுமான உணவுப்பொருட்களின் கையிருப்புக் காணப்படுகின்ற போதிலும், நாள்தோறும் கிடைக்கும் ஊதியத்தில் தங்கியிருப்போர், தற்போதுள்ள சூழ்நிலை காரணமாகத் தமது வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமலிருப்போர் போன்ற மிகவும் பாதிப்படையக்கூடிய குடும்பங்கள், அடிப்படையான உணவுப்பொருட்களைக்கூடப் பெறமுடியாமல் காணப்படுகின்றன.
நாடு முழுவதிலும் அடையாளம் காணப்பட்டுள்ள 30 பகுதிகளிலுள்ள கிட்டத்தட்ட 40,000 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்குவதற்கு வேள்ட் விஷன் கவனஞ்செலுத்துகிறது. தற்போது வரை, ஒன்பது பகுதிகளில் 9,095 உலருணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வேள்ட் விஷன் லங்கா அமைப்பு இந்த நிவாரண நடவடிக்கைகளை அரசாங்கத்தினூடாகக் கிராம மட்டத்தில் மேற்கொண்டு வருகிறது. குடும்பங்களுக்கு உதவும் இச்செயற்றிட்டத்தில் பங்களிக்க வருமாறு, அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவ்வமைப்புத் தெரிவித்தது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வேள்ட் விஷன் லங்காவின் சந்தைப்படுத்தலுக்கும் ஈடுபாட்டுச் செயற்பாடுகளுக்குமான பணிப்பாளர் கிளரன்ஸ் சுதர்சன், “எமது அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் அவசரநிலை நிவாரணச் செயற்பாடுகளிலும், 2015ஆம் ஆண்டிலிருந்து எச்.எஸ்.பி.சி எம்மோடு இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. கொவிட்-19 நெருக்கடிக்கான எமது நிவாரணச் செயற்பாட்டுக்கு உதவ அவர்கள் முன்வந்தமைக்கு நாம் மிகவும் நன்றியறிதலை வெளிப்படுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த எச்.எஸ்.பி.சி இலங்கை, மாலைதீவுகளுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் புரோதெரோ,
“முன்னணி சர்வதேச வங்கி என்ற அடிப்படையில், எமது பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சமுதாயத்துக்கும் ஆதரவளிப்பதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். கொவிட்-19 நிலைமை தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருவதால், சுகாதாரப் பராமரிப்புக்கும் நிதியியலுக்குமான நிவாரணச் செயற்பாடுகள் பலவற்றை நாம் கொண்டுள்ளோம். எங்களுடைய நிலைக்கத்தக்க கூட்டாண்மை முன்னெடுப்புகள் மூலமாக, தற்போதுள்ள சூழலில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடிய இடரைக் கொண்ட சமுதாயப் பிரிவுகளின் சவால்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவியளிப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அதன் காரணமாகவே நாம், அதிக உதவிகள் தேவைப்படும் சமுதாயங்களைச் சென்றடைவதற்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேள்ட் விஷனுடன் இணைந்து செயற்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்தார்.
வேள்ட் விஷன் என்பது அபிவிருத்திக்கும் பரிந்துரைபேசுவதற்குமான ஓர் அமைப்பாகும். இலங்கையில் 15 மாவட்டங்களில் 34 இடங்களில் இவ்வமைப்புப் பணியாற்றுவதோடு, பாதிப்படையக்கூடிய இடரைக்கொண்ட கிட்டத்தட்ட 100,000 சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வாழ்க்கையில் பங்களிப்புகளை ஏற்படுத்துகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago