2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

சீனாவில் நிர்வாண பனிச்சறுக்கல்

Super User   / 2011 மார்ச் 26 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில் அண்மையில் நடைபெற்ற நிர்வாண மற்றும் விநோத உடை பனிச்சறுக்கல் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றினர்.

சீனாவின் மேற்கு பகுதியில் ஸியாஜியாங் மாகாணத்திலுள்ள தியான்ச்சி சர்வதேச பனிச்சறுக்கல் பூங்காவில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் 22 பேர் நிர்வாணமாக அல்லது அரைநிர்வாணமாக பங்குபற்றினர். ஆண்கள் இருவர் பனிச்சறுக்கல் கருவி சப்பாத்து, தொப்பி தவிர வேறு எதையும் அணிந்திருக்கவில்லை.

'ஒவ்வொரு வருடமும் பனிச்சறுக்கல் சுற்றுப்போட்டிகளின் பின்னர் இந்த கொண்டாட்டத்தை நடத்திவருகிறோம். ஆனால், அவற்றில் இவ்வருட கொண்டாட்டம்தான் மிகச் சிறந்ததாகும் என இப்பூங்காவின் பேச்சாளர் கூறினார்.

இந்நிகழ்வில் சிறந்த ஆடை அணிந்தவருக்கான பரிசு, அரை நிர்வாணமாக ஆடைஅணிந்த ஸாங் ரோங்மின் என்பவருக்கு வழங்கப்பட்டது.

மிக குளிர்ந்த அழகிக்கான விருது ஸியே யோங் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர் பனிக்கட்டி சிற்பமொன்றின் மூலம் மாத்திரமே தனது அந்தரங்கப்பகுதியை மறைத்திருந்தார்.
 


  Comments - 0

 • Raasim Central Camp Ampara. 0752524132 Sunday, 27 March 2011 09:09 PM

  பைத்திய மனிதர்கள் அதிகரித்து விட்டார்கள்.

  Reply : 0       0

  xlntgson Sunday, 27 March 2011 09:22 PM

  எதை வைத்து மறைத்துக் கொண்டாலும் அது அரை நிர்வாணம் தான், ஆதி மனிதர்கள் இலை குலைகளை வைத்துத் தான் மறைத்துக் கொண்டு இருந்திருக்கின்றனர். பனிக்கட்டி உருகும் வரைதான் அதன் பின் முழு அம்மணமே!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .