2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கதிரைகளை உணவாக உட்கொள்ளும் பெண்

Kogilavani   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுவாக உணவுகளை உண்பதற்காக பலரும் நாற்காலியில் அமர்வர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயொருவர். கதிரைகளையே உணவாக உட்கொள்கிறார்.

ஆம். கதிரையில் இருக்கும் பஞ்சுகளை உண்பதற்கு இவர் அடிமையாகியுள்ளார்.

புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த அடேல் எட்வர்ட்ஸ் என்ற இப்பெண் வெளிப்படையாகவே தனது வீட்டிலிருக்கும் அத்தனை பொருட்களையும் மென்று விழுங்குவதை வழங்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக இலாஸ்டிக், பஞ்சு மற்றும் இறப்பர் போன்ற பொருட்களை அவர் அதிகம் விரும்புகின்றார்.

ஆனால், குஷன் கதிரைகளிலுள்ள பஞ்சுகளை உண்பதே அண்மைக்காலத்தில் அவரது மிகப் பெரிய பலவீனமாகியுள்ளது.

அவர்  'உட்கொண்டுவிட்ட' நாற்காலிகளின் எண்ணிக்கையை அறிந்தால் அதிர்ச்சி ஏற்படுகிறது.இதுவரை 8 சோபாக்கள், 4  நாற்காலிகளை உட்கொண்டுள்ளார். இதுவரை உட்கொண்ட பஞ்சுகளின் மொத்த எடை  சுமார் 100 கிலோகிராம் ஆகும்.

குதிரைகளை உண்பதற்கு அடிமையான இந்த விசித்திர தன்மையால் 38 வயதான அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அவரால் அதனை நிறுத்திக்கொள்ள முடியவில்லை.

அடேல் எட்வர்ட்ஸ் உண்பதற்கு பொருத்தமில்லாத பொருட்களை உண்ணத்தூண்டும் 'பிகா' எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எட்வர்ட்ஸ் இதுக் குறித்து தெரிவிக்கையில், 'எனக்கு 10 வயதாக இருக்கும்போது நான் முதன் முதலில் குஷனை உண்பதற்கு ஆரம்பித்தேன்' எனக்   கூறியுள்ளார்.

'முதலில் இது மிகவும் மிகவும் விசித்திரமான என்று நான் நினைத்தேன். பிறகு நான் தொடர்ச்சியாக அதனை உண்பதற்கு ஆரம்பித்துவிட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது' என்கிறார் "அவர்.

அடேலின் இந்த பழக்கம் அவரின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .