2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ரயில் மோதி குடும்பஸ்தர் பலி

எஸ்.என். நிபோஜன்   / 2017 மே 26 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி  பயணித்த தபால் ரயில் மோதி, குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என, மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (25) இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயில், மாங்குளம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள திரு முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையிலேயே இந்தச் சம்பசம் இடம்பெற்றுள்ளது.

ரயில் பாதையில் ஒருவர் படுத்திருப்பதை அவதானித்த ரயில் சாரதி ஒலி எழப்பி  அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ரயிலை நிறுத்துவதற்கு முயன்ற போதும், படுத்திருந்தவர் எழுந்திருக்காத நிலையில் அவரை ரயில் மோதிச் சென்று நின்றுள்ளது.

இச்சம்பவத்தில் திருமுறிகண்டி கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான தவம் அன்ரன்  பாலசூரியர் (வயது 44) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுள்ள ரயில்வே பொலிஸார், சடலத்தை ரயிலில்   ஏற்றிக் கொண்டு சென்று மாங்குளம் ரயில் நிலையத்தில் வைத்து மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சடலத்தை  ஒப்படைத்த ரயில், இரவு 10 மணிக்கு பின்னர் கொழும்பு நோக்கி பயணத்தை தொடர்ந்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .