Suganthini Ratnam / 2011 மார்ச் 27 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
மூதறிஞர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 113ஆவது ஜனனதினத்தையொட்டி, எதிர்வரும் 31ஆம் திகதி வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் வைபவம் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
தந்தை செல்வா அறங்காவல் குழுவினர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்தார்.
இதேவேளை இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இடங்களிலும் இவ்வாறான வைபவம் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .