2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முல்லை. குமுழமுனை மீள்குடியேற்றம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

புதுவருட விடுமுறையில் இராணுவத்தினர் சென்றுள்ளதால் முல்லைத்தீவு, குமுழமுனை மத்திய பிரதேசத்தில் நடைபெறவிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார்.

இன்றையதினம் முல்லைத்தீவு, குமுழமுனை மத்திய பிரதேசத்தில் சுமார் 106 குடும்பங்களைச் சேர்ந்த 296 பேர் மீள்குடியேற்றப்படவிருந்தனர். 

கடமையிலிருந்த இராணுவத்தினர் புதுவருட கொண்டாட்டங்களுக்காக தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளமையால் இந்த மீள்குடியேற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முகாம்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாகனங்களில் ஏற்றி வருவதற்கு இராணுவத்தினரின் உதவி தேவையென்பதுடன், அவர்கள் முன்னிலையிலேயே மீள்குடியேற்றம் நடைபெறுவதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X