2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி, முல்லைத்தீவு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் பஸில் தலைமையில்

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா, ரி.விவேகராசா)


கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு முல்லைத்தீவு செயலகத்திலும் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள், மீள்குடியேற்றத்தின் போது செய்யப்பட வேண்டிய வசதிகள் என்பன தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .