2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் கோரப்படுவதாக புகார்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவுக்கு செல்லும் வாகனங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப் பத்திரம் கோரப்படுவதாக தன்னிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவுக்கு செல்லும் சோதனை நிலையத்திலேயே இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப் பத்திரம் கோரப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். (ஆர்.எஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .