Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவில் தமிழ்ச் செம்மொழி விழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்செம்மொழி விழாவில் தமிழியல் வரலாறு தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து உரையாற்றலாம்.
அத்துடன், கவிதை, சிறுகதை போட்டியிலும் பங்கு பெறலாம். சிறுகதை ஆயின் மூன்று முதல் ஐந்து பக்கங்களும் கவிதை எனில் மரபுக் கவிதை என்றால் ஆறு தொடக்கம் ஒன்பது பந்திகளில் எழுத வேண்டும். புதுக்கவிதைக்கு வரையறை இல்லை.
ஆக்கங்கள் யாவும் 30.09.2010இற்கு முன்னதாக ஷ-எஸ்-திவகரன், பொதுச்செயலாளர், மன்னார் தமிழ்ச்சங்கம், இல ௩0 வைத்தியசாலை வீதி, மன்னார் எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
இவ்விழா தொடர்பானதும் போட்டிகள் சம்பந்தமாகவும் மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு 0233233276, 071497382 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
1 hours ago