2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

நெடுங்கேணி பகுதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் பலி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

காவல் கடமையில் இருந்த வேளையில் இராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அவ்வீரர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நெடுங்கேணி பிரதேசத்தில்  இன்று அதிகாலை 3 மணியளவில்  நடைபெற்றுள்ளது.

விசாரணைக்காக  சடலம் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. லான்ஸ் கோப்ரல் தரத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரே இறந்தவர் ஆவார். இச்சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .