2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி வைத்தியசாலையில் மார்பு நோய் சிகிச்சை நிலையம்

Super User   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt(சரண்யா)

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இந்த மாதத்திலிருந்து மார்பு நோய் தொடர்பான சிகிச்சை நிலையம் இயங்க ஆரம்பித்துள்ளதாக யாழ்.மாவட்டக் காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மீள இயங்க ஆரம்பித்த பின்னரும் அங்கு மார்புநோய் தொடர்பான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் இந்த நோய் தொடர்பான சிகிச்சைகளைப் பெற, நோயாளர்கள் பலரும் யாழ்ப்பாணத்துக்கே செல்லவேண்டியிருந்தது.

எனவே, கிளிநொச்சி வைத்தியசாலையில் மார்பு நோய் சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும் என் மக்கள் கோரிவந்தனர். இதனை கருத்தில் எடுத்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  மார்புநோய் தொடர்பான சிகிச்சைகள் இந்த மாதத்திலிருந்து வழங்கப்படுகின்றன.

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் மார்பு நோய் சிகிச்சைகள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வழங்கப்படுவதால் நோயாளர்கள் இத்தினங்களில் வந்து தமக்குரிய சிகிச்சைகளைப் பெறலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .