2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா பாடசாலைகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

வவுனியா மாவட்ட பாடசாலைகள் நேற்று வியாழன் முதல் அரை மணித்தியாலயம் தாமதித்து காலை 8 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2 மணி வரை இயங்குகின்ற இந்நடைமுறையினை பெற்றோர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய மாவட்ட அரச அதிபர் செயலகத்தில் நடைபெற்ற கல்வித் திணைக்கள அதிகாரிகள், சுகாதாரத் துறையினர் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வோல்ட் தெரிவித்தார்.

புதிய நேர மாற்றத்திற்கு அமைய பாடசாலைகள் நடைபெற வேண்டும் என சகல அதிபர்களுக்கும் சுற்றுநிருபம் மூலம்  கல்விப் பணிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த காலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர்.  டெங்கு நுளம்புகள் காலை வேளையில் தான் தாக்குகின்றது. இதனை தவிர்க்கும் பொருட்டு பாடசாலைகள் காலை 7௩0 மணிக்கு பதிலாக புதிய திட்டத்தின் பிரகாரம் 8 மணிக்கு ஆரம்பிக்கும் நடைமுறை வந்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .