2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஆடைத்தொழிற்சாலைக்கு கிளிநொச்சியில் நாளை அடிக்கல்

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு நாளை அடிக்கல் நட்டுவைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரதம விருந்தினராக இந்த நிகழ்வுக்கு வருகைதந்து அடிக்கல்லை நட்டுவைக்கவுள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் இத்தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் மேயர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் மஹிந்தானந்த ஆளுத்கம ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இங்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் மீள்குடியேற்றப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு இது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .