2021 ஜூன் 19, சனிக்கிழமை

வவுனியா வாகன விபத்தில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

வவுனியா பொலிஸ் பிரிவிலுள்ள பூந்தோட்டம்  குடியிருப்பு வீதியின் தென்னைமர தோட்ட சந்தியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் பலியாகியதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கரவண்டியும் விபத்தில் சிக்கியபோது, அந்த வீதியால் வந்த கனரக வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார்.

கணேசபுரத்தைச் சேர்ந்த 18 வயது பொன்னப்பு நவரூபன் என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.  

காயமடைந்தவர் பூவரசன்குளம்- சிவதர்சன் (வயது 23) என வவுனியா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பிரிவு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .