Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
வவுனியா நகரசபை மாதாந்தக் கூட்டத்தை சபைத் தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தியமைக்கு ஆட்சேபித்து சபை உறுப்பினர்கள் 10 பேரும் நகரசபை மைதானத்தில் கொளுத்தும் வெய்யிலிலும் சுமார் இரண்டு மணி நேரம் வாய்களை கறுப்புத் துணியினால் கட்டியவாறு மைதானத்தின் நடுவில் அமர்த்திருந்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உப தலைவர் முகுந்தன் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களான எஸ்.சுரேந்திரன், எஸ்.சிவகுமார், இ.கனகையா புளொட் உறுப்பினர்களாக எதிர்க்கட்சி தலைவர் ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, பார்த்தீபன், பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் லலித் ஜெயசேகர, அப்துல்பாரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எல்.முனாபர்
ஆகிய பத்து சபை உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி தலைவரின் நடவடிக்கையினை ஆட்சேபித்து தாம் இந்தப் போராட்டத்தில் இறங்கியதாக குறிப்பிட்டனர்.
காலை சபைக் கூட்டம் நடைபெற்றபோது தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை வழிமொழியப்பட்டது. அதையடுத்து தலைவர் கூட்டத்தை நிறுத்தி வைத்து வெளியேறினார்
நிகழ்ச்சி நிரலில் இல்லாத விடயங்கள் சபைக்கு கொண்டுவரப்பட்டது. அதனால்த் தான் கூட்டத்தை இடைநிறுத்தினேன் என நகரசபைத் தலைவர் ஜி.நாதன் தெரிவித்தார். நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆளுநருக்கு அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறினார். உபதலைவர் ரதன் தெரிவிக்கையில், ஜனநாயக விரோதச் செயல் காரணமாக நகரசபை சீரழிந்து காணப்படுகின்றது. சபையின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றார்.
கூட்டம் கூட்டப்பட்ட நோக்கத்திற்கு மாறாக தலைவர் செயல்பட்டார். அவரின் தனிமனித சர்வாதிகார போக்கை கண்டிக்கும் முகமாகவே நாம் கட்சி பேதமின்றி 10 உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில், மைதானத்திற்கு வருகை தந்த வன்னி எம்பிக்கள் சிவசக்தி ஆனந்தன் வினோநோகராதலிங்கம் ஆகியோர் சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று கட்சியின் தலைமைப் பீடத்திற்கு விடயத்தை தெரிவித்து அடுத்த மாதாந்த கூட்டத்திற்கு முன்னர் இதற்கான தீர்வுகள் முன்வைக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.
11 minute ago
18 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
49 minute ago